கூகுள் பே-இல் இந்த தவறுகளை பண்ணாதீங்க.. ஒரு ரூபாய் கூட மிஞ்சாது! பெண்களுக்கும் பெரிய ஆபத்து இருக்கு
சென்னை: இப்போது கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ முறைகளை மக்கள் பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே யுபிஐ முறைகளை பயன்படுத்துவோரை குறிவைத்து புதுவித மோசடி அதிகரிக்க தொடங்கியுள்ளதாம். இந்த விவகாரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி இப்போது சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால் நாம் பணத்தை இழப்பது மட்டுமின்றி பெண்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறதாம்.
இந்த காலத்தில் ஆன்லைன் பண பரிமாற்றங்களையே மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதிலும் இளைஞர்கள் எல்லாம் பணத்தை ரொக்கமாக தொடுவதே அரிதாவிட்டது.

யுபிஐ: இந்த புது புது வசதிகள் இருப்பதாலேயே பர்ஸ் இல்லை என்றாலும் கூட மொபைலை வைத்தே எங்கு சென்றாலும் நம்மால் சமாளிக்க முடிகிறது. அதிலும் குறிப்பாக யுபிஐ மக்களிடையே அதிகம் பிரபலமடைந்துள்ளது. இது சில்லறை பிரச்சினைகள் தொடங்கி ஏகப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் இப்போது யுபிஐ பேமெண்ட் முறையை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
கார்டு பேமெண்ட் முறை பல காலமாக இருந்தாலும் கூட அதை விட இப்போது யுபிஐ முறை பிரபலமடைந்து விட்டது. சிறு விற்பனையாளர்கள் யுபிஐ முறையில் பணத்தை ஏற்றுக் கொள்வதே இதற்கு முக்கிய காரணமாகும். ஏனென்றால் கார்டு பேமெண்ட் முறையில் வணிகர்கள் பணத்தை வாங்கும் போது குறிப்பிட்ட சதவிகிதத்தை கமிஷனாக கொடுக்க வேண்டும். ஆனால், யுபிஐ பேமெண்ட் முறையில் வணிகர்கள் எந்தவொரு கமிஷனையும் கொடுக்க தேவையில்லை. இதன் காரணமாகவே யுபிஐ பேமெண்ட் முறைக்கு மக்களும் சரி, வணிகர்களும் சரி ஆதரவு அளிக்கிறார்கள்.
யுபிஐ பேமெண்ட்: இதன் காரணமாகவே யுபிஐ பேமெண்ட் முறைக்கான ஆதரவு அதிகமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் யுபிஐ பேமெண்ட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. மக்கள் ஆதரவு அதிகரிக்கும் நிலையில், இதை வைத்து நடக்கும் மோசடிகளும் அதிகரித்துள்ளது. இதனால் சைபர் க்ரைம் போலீசார் இது தொடர்பான எச்சரிக்கையை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
அப்படி தான் இப்போது ஒரு வகை மோசடி அதிகரித்துள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் இப்போது புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வகை மோசடிக்கு எளிதாக பலரும் சிக்கிவிடுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மோசடி: அதாவது முன்பின் தெரியாத ஒருவர் கூகுள்பே அல்லது எதாவது ஒரு யுபிஐ செயலி மூலம் தெரிந்தே உங்களுக்கு பணத்தை அனுப்பிவிடுவார்கள். பிறகு உங்களை தொடர்பு கொண்டு அவசரத்தில் வேறு ஒருவருக்கு பணம் அனுப்புவதற்கு பதிலாக உங்களுக்கு மாற்றி அனுப்பிவிட்டேன். ப்ளீஸ் பணத்தை திருப்பி அனுப்பிவிடுங்கள் என கெஞ்சுவார்கள். நீங்களும் பரிதாபப்பட்டு சரி பணத்தை அனுப்புகிறேன் என சொன்னால்.. அவர்கள் கூகுள் பே வழியாக வாங்க மாட்டார்கள்.
இதை மட்டும் செய்யாதீங்க: அதற்கு பதிலாக வேறு ஒரு மெசேஜ்ஜை அனுப்புவார்கள். அதில் இருக்கும் லிங்கை க்ளிக் செய்தால் அப்படியே கூகுள் பே அல்லது ஒரு யுபிஐ செயலி போலவே அது இருக்கும். சிறு சிறு மாற்றங்கள் அதில் இருக்கும் என்ற போதிலும் அதை நம் கவனிக்க மாட்டோம். வழக்கம் போல பின் நம்பரை போட்டு பணத்தை அனுப்ப முயல்வோம். இதை செய்தால் அவ்வளவு தான். உங்கள் வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும். பணம் முழுவதையும் திருடிவிடுவார்கள்.
அப்போ பணத்தை யாராவது தவறாகப் அனுப்பினால் என்ன செய்யலாம் என நீங்கள் கேட்கலாம். அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு அடையாள சான்றுடன் வந்து பணமாக வாங்கிக் கொள்ள சொல்லுங்கள் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
பெண்களே கவனம்: இதேபோல யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும் போது பெண்களுக்கு மற்றொரு பாதிப்பும் இருக்கிறது. அதாவது கார் அல்லது ஆட்டோவில் போகும் போது நீங்கள் யுபிஐ செயலிகள் மூலம் பணம் அனுப்புகிறேன் எனச் சொன்னால் அவர்கள் நம்பர் சொல்கிறேன் என்பார்கள். நீங்கள் நம்பர் மூலம் பணத்தை அனுப்பும் போது உங்கள் மொபைல் எண்ணும் அவர்களுக்குத் தெரிந்துவிடும். இதுபோல நம்பர் கிடைக்கும் போது பெண்களுக்கு ஆன்லைனில் மெசேஜ் அனுப்பும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்ததாகக் கூறுகிறார்கள்.
இதை வைத்து மோசடிகளும் சில இடங்களில் பாலியல் தொல்லைகளும் நடந்துள்ளன. எனவே, இதுபோல உங்களுக்கு யாராவது மெசேஜ் செய்தால் உடனே பிளாக் செய்யுமாறு வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்
-
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications