மன அழுத்தம் வராமல் இருக்க.. இதை பாலோ பண்ணுங்க.. இளம் தலைமுறையினருக்கு முன்னாள் டிஜிபி அட்வைஸ்
சென்னை: கோவை சரக டிஐஜி தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டவசமானது என்று முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு , சைக்கிளிங் போன்றவற்றில் ஈடுபட்டால் உடல் நலத்தோடு மன நலம் மேம்படும் என்று அறிவுரை கூறியுள்ளார்.
சென்னை தரமணியில் நடைபெற்ற சைக்கிளிங் திருவிழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் அவர் கூறியதாவது:- இன்றைய இளம் தலைமுறையினர் ஆன்லைன் கேம்ஸ்கள் விளையாடுவதை விட்டு விட்டு வந்து படிக்கும் நேரத்தை தவிர்த்து மீதி நேரங்களில் சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது போன்ற பயனுள்ள உடற்பயிற்சிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டால் உடல் நலம் மேம்படும்.

மன நலம் மேம்படும். மன அழுத்ததத்தல் சமீபத்தில் ஒரு சில தற்கொலை செய்து கொண்டனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்கும் கூட சைக்கிளிங் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். சைக்கிள் ஓட்டுவதை கண்டிப்பாக பொதுமக்கள் மத்தியில் எடுத்துக் கொண்டு போய் பிரபலப்படுத்த வேண்டும். அப்படி மாற்றும் போது பெரும்பாலும் நோய்கள், லைஃப் ஸ்டைல் நோய்களான டையபடிஸ் போன்றவை வராமல் ஹெல்தியாக இருப்பது அவசியம்.
மக்கள் ஹெல்தியாக இருந்தால்தால்தான் அவர்கள் ஒழுங்காக வேலை பார்க்க முடியும்" எனறார். பின்னர் டிஐஜி விஜயகுமார் தற்கொலை செயுது கொண்டது குறித்து பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, டிஐஜி விஜயகுமார் மரணம் அடைந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மன அழுத்தம் முன்கூட்டியே நடந்து இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு தெரிந்துள்ளது.
அவர்களும் முயற்சி எடுத்து இருக்கிறார்கள். அதையும் மீறி இது நடந்து இருக்கிறது என்றால் இந்த மன நோய் என்பது மிகப்பெரிய கொடிய நோய் என்பது நமக்கு தெரிய வருகிறது. இதுக்காக சப்போர்ட் சிஸ்டம் அவசியம். அதாவது உறவினர்கள், நண்பர்கள், துறையை சேர்ந்தவர்கள் இவர்கள் எல்லாம் இதை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் அவரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள் சொல்வது.
காவல்துறையில் இதுபோன்ற விவகாரங்களை தடுக்க தொன்றுதொட்டே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நிறைய முயற்சி எடுத்தோம். பயிற்சியாளர்களை உருவாக்கினோம். காவல் துறையை சார்ந்தவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மனநல பயிற்சியாளர்களாகவும் அவர்களை உருவாக்கியுள்ளோம். அவர்கள் மற்ற காவலர்களுக்கு மன அழுத்ததில் இருந்து விடுபடுவது குறித்த பயிற்சிகளை அளிக்கின்றனர்" என்றார்.












Click it and Unblock the Notifications