நெருங்கும் அக்வான்! சென்னை உட்பட.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள புயல், சென்னை அல்லது ஆந்திராவில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கும் நிலையில்.. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும்.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்திருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் உருவாகும். இப்படி உருவாகும் இந்த புயலுக்கு அக்வான் என்று பெயரிடப்பட்ட உள்ளது.

இந்த புயல் எந்த பகுதியில் கரையை கடக்கும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து 2 புயல்கள் உருவாகியிருந்தன. அவை ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டி கரையை கடந்தன. இப்படி இருக்கையில் இந்த புயல் தமிழகத்திற்கா? என்று கேள்விகள் எழுந்திருந்தன.
இன்று காலை வரை கிடைக்கப்பெற்ற வானிலை ஆய்வு மாதிரிகளை, AI கொண்டு அனலிஸ் செய்ததில், புயல் சென்னைக்குதான் என்று சொல்லப்பட்டன. ஆனால், வழக்கமாக இப்படி உருவாகும் புயல்களின் பேட்டனை ஆய்வு செய்தபோது.. அது ஆந்திராவுக்கு செல்வதில்தான் வாய்ப்புகள் அதிகம் இருந்தன. அந்த வகையில், தற்போது புயல் சென்னைக்கா? ஆந்திராவுக்கா? வானிலை ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில், சில தனியார் வானிலை ஆய்வாளர்கள் சென்னைக்குதான் புயல் என்று கூறினர்.
ஆனால், வானிலை ஆய்வு மையம்.. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்றும், ஆந்திராவுக்குதான் பாதிப்பு என்றும் கூறியிருந்தது. இப்படி இருக்கையில்.. தற்போது சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தூத்துக்குடி என 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றினால் என்ன அர்த்தம்?
கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்பதை அறிவிக்க இந்த கூண்டு ஏற்றப்படும். காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் இருக்கும். கடலுக்கு செல்லும் மீனவர்கள் தொடர்ந்து வானிலை அறிக்கையை கவனிக்க வேண்டும். 1ம் எண் கூண்டு ஏற்றப்படுகிறது எனில், அந்த கடற்கரைக்கோ, துறைமுகத்திற்கோ உடனடியான பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
