Cyclone amphan: வங்கக் கடலில் இன்று தீவிரமாக மாறும் ஆம்பன் புயல்.. தமிழகத்திற்கு என்ன வார்னிங்!
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் 20ம் தேதி புவனேஸ்வரில் கரையை கடக்க உள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு என்ன எச்சரிக்கை என்பதை இப்போது பார்ப்போம்.
Recommended Video
வங்கக் கடலில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்தம் நேற்று தீவிர காற்றழுத்தமாக மாறியது. பின்ன அது மேலும் வழுவடைந்து வடமேற்கு திசையில் நகர தொடங்கியது.
தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதாக மாறியுள்ளதால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து அதிக அளவு வெப்ப நிலை நிலவுகிறது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ளல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த அம்பன் புயல் இன்று மாலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் என கூறப்படுகிறது.

எப்படி நகரும்
பின்னர் அம்பன் தீவிரப்புயல் இன்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையிலம் 18ம் தேதி முதல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையிலும் நகரும். இந்த நிகழ்வின் காரணமாக வங்கக்கடலில் இன்று மணிக்கு 80 கிலோமீட்டர் முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சூறாவளி காற்று வீசும்
18ம் தேதி மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 145 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசும். 19ம் தேதி 165 கிலோமீட்டர் முதல் 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். 20ம் தேதிவடக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 170 கிலோமீட்டர் முதல் 190 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்.

கடலில் கடும் சீற்றம்
அம்பன் புயலின் நகர்வு காரணமாக கடலில் கடும் சீற்றம் காணப்படும். இந்த புயல் தமிழகம் மறற்ம் ஆந்திர கடல் பகுதியை நெருங்கி வருவது போல் வந்து வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று 20ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பம் அதிகரிக்கும்
இந்த அம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் வெயில் மற்றும் வெப்பம் காணப்படும். அதாவது திங்கட்கிழமை முதல் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை உயர்ந்து காணப்படும். இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் 40 முதல் 42 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாம்
இன்று முதல் 20ம் தேதி வரை வங்ககடல் பகுதிகளில் சூறவாளி காற்று பலமாக வீசும் என்பதால் கட்லில் சீற்றம் அதிகமாக இருக்கும்.மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். வங்கக்கடலில் புயல் மையம் கொண்டிருப்பதாலும், அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் வளைந்து செல்லும் என்பதாலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுபபள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications