கரையைக் கடக்க தொடங்கிய ஒர்னாப் புயல்.. சூறைக்காற்றுடன் கனமழை! ஹை அலர்ட்டில் ஆந்திரா

Subscribe to Oneindia Tamil

விசாகப்பட்டினம்: வங்கக்கடலில் உருவான ஒர்னாப் புயல் நள்ளிரவு 2 மணிக்கு மேல் ஆந்திராவில் கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. ஏனாம் - காக்கிநாடா இடையே புயல் கரையைக்கடக்க தொடங்கியுள்ள நிலையில் ஆந்திராவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

அதிகாலை 4 மணி அளவில் புயல் முழுவதும் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையக் கடந்த பிறகும், கனமழை, பலத்த காற்று நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இடையிடையே 150 கிமீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Cyclone Ornap begins crossing the coast heavy rain accompanied by gale-force winds Andhra Pradesh on high alert

புயல் கரையக் கடப்பதால் ஆந்திராவிலும், ஒடிசாவிலும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பாட்டுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. ஒர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணுரிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எண்ணூரில் கடல் அலைகள் கடற்கரைச் சாலையைத் தாண்டி வந்தது. சில பைக்குகளையும் கடல் நீர் அடித்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

புயலின் தாக்கத்தால் எண்ணூர் விரைவுச்சாலையில் கடல் நீர் ஆறு போல ஓடியது. இதனால் எண்ணூர் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. எண்ணூர் குடியிருப்புக்குள்ளும் கடல் நீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+