நகர மறுக்கிறது.. வலுவிழந்த பின்பும் ஆட்டம் காட்டும் புரேவி.. இனிதான் கனமழை பிச்சு எடுக்கும்.. கவனம்!
சென்னை: புரேவி புயல் தொடர்ந்து ராமநாதபுரம் அருகே மையம் கொண்டுள்ளது. இதனால் அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை பிச்சு எடுக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் போதே எதிர்பார்த்ததை விட அதிக அளவு மழை பெய்தது. அதன்பின் நிவர் புயல் தமிழகத்தை தாக்கியது. இதனால் வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான புரேவி புயல் தற்போது தமிழகம் நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. ராமநாதபுரம் அருகே இருக்கும் இந்த புரேவி தூத்துக்குடியை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

எங்கு
நேற்று இரவு புரேவி புயல் இலங்கை திருகோணமலை- பருத்தித் துறைக்கு இடையே முல்லைத்தீவு அருகே நேற்று இரவு கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போதே வலிமை இழந்துவிட்டது. இதனால் தற்போது ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக இந்த புயல் உருவெடுத்து இருக்கிறது.

புயல்
இந்த ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தூத்துக்குடி நோக்கி நகர்ந்து வருகிறது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமை இழந்த புரேவி புயல் தொடர்ந்து ராமநாதபுரம் அருகே மையம் கொண்டுள்ளது. ஒரே இடத்தில் நிலை கொண்ட தாழ்வு மண்டலம் பொதுவாக அதிக மழையே கொடுக்கும்.

காற்று
ஒரே இடத்தில் இருப்பதால் தாழ்வு மண்டலங்கள் அதிகம் வலிமை பெறும். இப்படி நகராமல் இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அதிக மழை பெய்யும் மற்றும் காற்று வீசும். இதனால் புரேவி புயல் வலுவிழந்த பின்பும் தீவிர காற்று மற்றும் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

நகரவில்லை
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக புரேவி ஒரே இடத்தில் இருக்கிறது. இதன் காரணமாக இப்போதே தென் மாவட்டங்களில் மழை தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. இப்படி நகராமல் இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

எப்படி மழை பெய்யும்
முக்கியமாக அடுத்த சில மணி நேரங்களுக்கு தென் தமிழகத்தில் கனமழை பிச்சு எடுக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.ராமநாதபுரத்தில் இருந்து 40 கிமீ, பாம்பனில் இருந்து 160 கிமீ தூரத்தில் இந்த புரேவி நகராமல் இருக்கிறது. இதனால் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications