Cyclone Ditwah: விட்டுட்டு போகாத டிட்வா.. சென்னைக்கு 2 நாள் மழை இருக்கு! ஹை அலர்ட்டில் இருக்கோம்.. NDRF டிஐஜி பேட்டி
சென்னை: டிட்வா புயல் (Cyclone Ditwah) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது எனவும், சென்னையில் 6 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது, சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தேவைப்பட்டால் புனே மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னைக்கு வருவார்கள் என தேசிய பேரிடர் மீட்பு படையின் டிஐஜி ஹரி ஓம் காந்தி கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்க கடலில் டிட்வா புயல் உருவான நிலையில் நேற்றுவரை வலுவிழக்காமல் தமிழக கடலோரப் பகுதிகளில் வலம் வந்தது. ஆனாலும் வறண்ட காற்றுடன் கலந்ததால் அது எதிர்பார்த்த மலையை கொடுக்கவில்லை.
தற்போது இந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்து உள்ளது. பிற்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வங்க கடலில் வலுவிழந்த டிட்வா சென்னை அருகே இருப்பதால் சென்னைக்கு நல்ல மழை கிடைக்கும் என கூறப்படுகிறது.

டிட்வா புயல்
இந்த நிலையில் டிட்வா புயலால் வடகடலோர மாவட்டங்களில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், அங்குள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் இடம் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையி்ன் டிஐஜி ஹரி ஓம் காந்தி ஆசோனை மேற்கொண்டார். நேற்று இரவு டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கட்டுபாட்டு மையத்தில் உள்ள அதிகாரிகள் இடம் தேசிய பேரிடர் மீட்பு படையின் டிஐஜி ஹரி ஓம் காந்தி விவரங்கள் மற்றும் சூழல்களை கேட்டறிந்தார்.
தேசிய பேரிடர் மீட்பு படை
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய பேரிடர் மீட்பு படையின் டிஐஜி ஹரி ஓம் காந்தி,"
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 25 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 22 குழுக்களும் புதுச்சேரியில் 3 குழுக்களும் உள்ளது. அதில் சென்னையில் மட்டும் 6 குழுக்கள் தயாராக உள்ளது. குறிப்பாக மணலியில் 2 குழுக்கள் கிண்டியில் 1 குழு மற்றும் வடபழனியில் 2 குழுக்கள் மற்றும் எழும்பூரில் ஒரு 1 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயாராக உள்ளது.
சென்னை மழை
சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு தேவைப்பட்டால் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வர வைக்கப்படும். தற்போது வரை வடகடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்புகள் இல்லை. எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் சென்று மீட்பு பணிகள் மேற்கொள்ளும் அளவிற்கு பாதிப்புகள் இல்லை. சில இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. தொடா்ந்து சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் உள்ள இடங்களுக்கு சென்று அவர்கள் தயாராக உள்ளார்களா என ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.
புயல் அப்டேட்
டிட்வா புயல் நேற்று ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு தேவைப்படும் பட்சத்தில் புனே மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வர வைக்கப்படும். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுக்களில் பத்து குழுக்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான்" என தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications