ஃபெஞ்சல் புயல் 14 மாவட்டங்களை சூறையாடிருச்சு.. ரூ.2,000 கோடி கேட்டு பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் இதுவரை கண்டிராத வகையில் சூறையாடியுள்ளது என்றும், இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், புயல் பாதிப்பு நிவாரணமாக 2,000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் விழுப்புரம், கடலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை பதம் பார்த்து சென்ற நிலையில், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. புயல் பாதிப்பையடுத்து ரூ. 2 ஆயிரம் கோடி நிவாரணம் நிதி அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் #CycloneFengal சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 இலட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, #NDRF-இல் இருந்து உடனடியாக 2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications