கஜா வர்றாண்டா.. 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?
Recommended Video

சென்னை: கஜா புயல் நாளை மாலை கரையை கடக்க உள்ள நிலையில், தஞ்சை, கடலூர் உட்பட 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் நாளை மாலை கடலூர் மற்றும் பாம்பன் நடுவே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மீட்பு பணி
கடலூர் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் உயர் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாகையில் விடுமுறை
இதனிடையே, நாகை மாவட்டத்தில், நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகம், புதுச்சேரி
இதன்பிறகு, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்திலும், புதுச்சேரி மாவட்டத்திலும் நாளை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எப்படி?
கஜா புயலின் தாக்கம் மற்றும் மழை காரணமாக சுமார் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எனவே படிப்படியாக மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு இன்று வெளியாகும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் சென்னையும் இடம் பிடிக்குமா என்பது இதுவரை தெரியவில்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications