தமிழகத்தை தாக்க வருகிறது ‘தாமரை புயல்’.. நித்தம் நித்தம் சிக்கும் தலைகள் எத்தனையோ?
Recommended Video
சென்னை: பிற மாநிலங்களில் நடத்திய அரசியல் ஆபரேஷன்களை தமிழகத்திலும் முழு வீச்சில் செயல்படுத்த பாஜக முனைப்புடன் களமிறங்கியுள்ளது. இந்த பெரும் புயலில் சிக்கப் போகும் தலைகளால் தமிழக அரசியல் களம் இனி பரபரப்பாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
பாஜகவைப் பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற அத்தனை வழிகளையும் கையில் எடுப்பதில் தவறில்லை என்கிறது. அரசியலில் வெற்றிதானே குறிக்கோள் என்பது அக்கட்சியின் வாதம்.
கட்சித் தாவல்கள் என்கிற பழைய பாணியை பாஜக கைவிட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல்... எதுவாக இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்கிற செல்வாக்கு உள்ள மாற்றுக் கட்சியினரை வளைப்பதற்கு முதலிடம் கொடுத்து வருகிறது பாஜக. அதுவும் ஒன்றிரண்டு பேரை இணைத்துக் கொள்ளாமல் கொத்து கொத்தாக பாஜகவில் இணைத்துக் கொள்வதுதான் அக்கட்சியின் புதிய பாணி.

இனி வேட்டை ஆரம்பம்
அதேபோல் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தால் அந்த கட்சிகளின் எம்.எல்.ஏக்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைப்பது என்பது இன்னொரு பார்முலா. இத்தனை பார்முலாக்களையும் கையில் வைத்திருக்கும் பாஜக தமிழக நிலவரங்களை இதுநாள் வரை வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தது.

அதிமுக எம்.பிக்கள்
ராஜ்யசபாவில் தமது எம்.பி.க்களின் பலத்தை அதிகரிக்க அதிமுக எம்.பிக்களை கூண்டோடு வளைக்கப் போகிறது பாஜக என்கிற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. தற்போது அடுத்த ஆட்டத்தை தமிழகத்தில் நேரடியாக தொடங்க இருக்கிறதாம் பாஜக.

பாஜக மீது நம்பிக்கை
கட்சி பாரபட்சமின்றி எல்லோரையும் அரவணைத்துக் கொள்ளும் மனோபாவத்துடன் களமிறங்குகிறதாம் பாஜக. எதிர்காலத்தில் தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை. இதனால் தங்களுக்கான ஒரே வாய்ப்பாக பாஜகவையே பலரும் நம்புவார்கள் என்பது அக்கட்சியின் கணக்கு,

அதிருப்தி பட்டியல் ரெடி
அத்துடன் சில பல வழக்குகளில் சிக்கி விழிபிதுங்கி கிடப்பவர்கள். கட்சி தலைமைகள் மீது அதிருப்தி கொண்டு ஊசலாட்டத்தில் இருப்பவர்கள், நீண்டகாலமாக உழைத்தும் வாய்ப்பே தரப்படாதவர்கள் என்கிற அடிப்படையில் ஒவ்வொரு கட்சி பிரமுகர்களையும் கணக்குப் போட்டு வைத்திருக்கிறதாம் பாஜக. இனி தமிழகத்தில் பாஜக தமது விஸ்வரூபத்தை வெளிப்படுத்தும் என்பது அக்கட்சியினரின் நம்பிக்கை.

பாஜகதான் பேசு பொருள்
இந்த விஸ்வரூப பேரலையில் நித்தம் நித்தம் தலைகள் சிக்கும்... இனி பாஜகதான் தமிழகத்தின் பேசுபொருளாக இருக்கும் என கொண்டாடுகின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications