சென்னை: மாண்டஸ் புயலால் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படவில்லை. தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை மீண்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தென்சென்னை, வடசென்னையை ஆய்வு செய்த பின்னர் இதனை தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் தென்கிழக்கில் மையம் கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுவடைந்திருக்கிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருக்கிறது. இப்புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளது.
மணிக்கு 15 கி.மீ.வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மாண்டஸ் புயல் தற்போது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தமிழகத்தின் 28 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Dec 10, 2022, 8:04 pm IST
சென்னை அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் வலுவிழந்ததாக வானிலை மையம் அறிவிப்பு
Dec 10, 2022, 8:04 pm IST
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாண்டஸ் புயல் வலுவிழந்ததாக தகவல்
Dec 10, 2022, 8:04 pm IST
வடமேற்கு திசையில் இது நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இது மேலும் வலுவிழக்கும்
Dec 10, 2022, 1:23 pm IST
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Dec 10, 2022, 1:23 pm IST
திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
Dec 10, 2022, 1:23 pm IST
திருப்பத்தூர், கிருஷ்ணகிரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது - வானிலை ஆய்வு மையம்
Dec 10, 2022, 1:05 pm IST
மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
Dec 10, 2022, 1:00 pm IST
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேலூர் அருகே நிலை கொண்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்
Dec 10, 2022, 1:00 pm IST
6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் - வானிலை ஆய்வு மையம்
Dec 10, 2022, 12:31 pm IST
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அளிக்கிறார்
Dec 10, 2022, 12:30 pm IST
காசிமேடு பகுதியில் மக்களுக்கு சாம்பார் சாதம், போர்வைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
Dec 10, 2022, 12:14 pm IST
மாண்டஸ் புயல் பாதிப்பில் இருந்து சென்னை மீண்டுள்ளது - முதல்வர் ஸ்டாலின்
Dec 10, 2022, 12:13 pm IST
தமிழக அரசு முன்னெச்சரிக்கை காரணமாக மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் - முதல்வர் ஸ்டாலின்
Dec 10, 2022, 12:13 pm IST
மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன - முதல்வர் ஸ்டாலின்
Dec 10, 2022, 12:13 pm IST
இரவு, பகல் பாராமல் அமைச்சர்கள், அதிகாரிகள் பணியாற்றியுள்ளனர் - முதல்வர் ஸ்டாலின்
Dec 10, 2022, 12:12 pm IST
புயல் சேத நிலவரம் குறித்து மாவட்ட தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசினேன் - முதல்வர்
Dec 10, 2022, 12:12 pm IST
தென்சென்னை, வடசென்னையில் புயல் பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்
Dec 10, 2022, 12:12 pm IST
சென்னை காசிமேடு துறைமுகத்தில் ஆய்வு செய்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
Dec 10, 2022, 12:04 pm IST
காசிமேடு துறைமுகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
Dec 10, 2022, 12:04 pm IST
சேதமடைந்த படகுகள் குறித்து மீனவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்
Dec 10, 2022, 11:42 am IST
மாண்டஸ் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது
Dec 10, 2022, 11:42 am IST
கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செ.மீ. மழை பதிவு
Dec 10, 2022, 11:42 am IST
ராணிப்பேட்டை மாவட்ட மின்னல், பனப்பாக்கத்தில் 20 செமீ மழை பதிவு
Dec 10, 2022, 11:38 am IST
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செல்ல போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது
Dec 10, 2022, 11:38 am IST
சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி
Dec 10, 2022, 11:38 am IST
மாண்டஸ் புயலுக்கு 350 மரங்கள் வேரோடு சாய்ந்தன
Dec 10, 2022, 11:37 am IST
புயல் பாதிப்பால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு
Dec 10, 2022, 11:17 am IST
சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் கரையை கடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
10:20 AM, 9 Dec
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிர புயலாகி உள்ளது
10:20 AM, 9 Dec
வேதாரணயத்தில் கடல் கடும் சீற்றம்- 5 அடி உயரத்துக்கு அலைகள் சீறுகின்றன
10:20 AM, 9 Dec
மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது
10:20 AM, 9 Dec
மாண்டஸ் புயல்- சென்னை மெரினாவில் கடல் சீற்றம்- கடற்கரைக்கு செல்ல தடை விதிப்பு
10:26 AM, 9 Dec
மெரினாவில் கடல் சீற்றத்தால் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம்
11:02 AM, 9 Dec
மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு சென்னை போக்குவரத்துக் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது
பொது மக்கள் கவனத்திற்கு மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமானக் காரணங்களுக்காக மட்டுமேப் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுமாறுப் போக்குவரத்துக் காவல்துறைச் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) December 9, 2022
11:07 AM, 9 Dec
வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள மாண்டஸ் புயலால் கடலூர் தாழங்குடா கடற்கரையில் பலத்த காற்றுடன் கடல் அலை 10 அடி வேகத்தில் சீற்றத்துடன் காணப்படுகிறது.
11:08 AM, 9 Dec
புயலால் சேதமடைந்த மாற்று திறனாளிகளுக்கான பாதை விரைவில் சீர் செய்யப்படும் - சென்னை மாநகராட்சி மேயர் பிரியா
11:15 AM, 9 Dec
புதுச்சேரியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது- அலைகள் சுமார் 15 அடி வரை உயர்ந்து காணப்படுகிறது
11:15 AM, 9 Dec
சென்னை போரூர் ஏரியிலிருந்து 100 கன அடிநீர் புதிதாக கட்டப்பட்ட கொளத்துவாஞ்சேரி மதகின் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறது
11:38 AM, 9 Dec
சென்னைக்கு தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல்
11:38 AM, 9 Dec
சென்னையில் மீண்டும் பல இடங்களில் மழை
11:48 AM, 9 Dec
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் வலு குறைந்தது
11:48 AM, 9 Dec
மாண்டஸ் புயல் வலு குறைந்தது - வானிலை ஆய்வு மையம்
11:53 AM, 9 Dec
செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் மூன்று பிரிவுகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்- மாவட்ட எஸ் பி பிரதீப்
12:06 PM, 9 Dec
வங்க கடலில் மையம் கொண்ட மாண்டஸ் புயல் நாளை அதிகாலை கரையை கடக்கும்
12:06 PM, 9 Dec
சென்னையில் இன்று இரவு பேருந்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு
12:06 PM, 9 Dec
வேளாங்கண்ணியில் கடல் நீர்மட்டம் உயர்வு- கண்காணிப்பு கோபுரங்களை கடல்நீர் சூழ்ந்துள்ளது
12:09 PM, 9 Dec
மாமல்லபுரம் நெம்மேலிகுப்பத்தில் கோவிலை கபளீகரம் செய்யும் கடல்நீர்- சுற்றுசுவர்கள் இடிந்தன
12:17 PM, 9 Dec
மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் 2 நாட்களுக்கு மூடல்
12:27 PM, 9 Dec
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் மாண்டஸ் புயலால் சீறும் கடல்
Cyclone Mandous ['மாண்டஸ் புயல்’] LIVE Tracking News Updates in Tamil: Check the Mandous Puyal live tracking status, current location, speed, path, rain alerts in tamil nadu districts and latest news updates in Tamil.