கஜாவை விடுங்க.. வங்கக்கடலில் உருவாகுது புது புயல்.. இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைதான்
Recommended Video

சென்னை: வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்கிறது.
இதற்கெல்லாம் காரணம், காற்றழுத்த தாழ்வு நிலைதான் என்றாலும், இது வலுவடைந்து அடுத்த சில நாட்களில் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை
இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது. காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால், 3 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பரவலாக மழை
இன்னும், 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை மழை
நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர். இதனிடையே, வங்கக்கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை, 6ம் தேதிவாக்கில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரம் அடைகிறது.

புயலுக்கு வாய்ப்பு
இதன் காரணமாக வட தமிழகத்தில் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய பிறகு அது மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 4 நாட்களில் அதாவது டிசம்பர் 10ம் தேதி வாக்கில், புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications