எங்க இருக்கான் கலெக்டர்.. திருவள்ளுர் ஆட்சியரை ஒருமையில் திட்டிய திமுக எம்எல்ஏ.. சர்ச்சை
சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண உதவி வழங்கும் விழாவுக்கு வந்த பூந்தமல்லி திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி திருவள்ளுர் கலெக்டர் பிரபு சங்கரை பார்த்து, ‛‛எங்க இருக்கான் கலெக்டர்'' என சீறி ஒருமையில் திட்டியது முதலில் வணக்கம் வைக்க கத்துக்கோ என தெரிவித்த வீடியோ வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக சென்னை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கடந்த 5ம் தேதி புயல் கரையை கடந்தது.

இதையடுத்து மழை குறைந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது. மக்கள் மீட்கப்பட்டனர். தற்போது சென்னை உள்பட 4 மாவட்டங்களும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இதற்கிடையே தான் அரசு, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளுர் மாவட்டம் திருமழிசையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி மாலை 4.30 மணி முதல் மாலை 5 மணிக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பூந்தமல்லி திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி மாலை 4 மணிக்கே வந்தார். பொதுமக்களும் வந்து காத்திருந்தனர். ஆனால் மாவட்ட பொறுப்பு அமைச்சர் காந்தி மற்றும் கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் வேறு இடத்துக்கு நிவாரண உதவிகள் வழங்க சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களால் குறித்த நேரத்துக்கு திருமழிசை சமுதாய நலக்கூட விழாவில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து அங்கு காத்திருந்த பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி கோபமாக கிளம்பி சென்றார். பயனாளிகள் வேறு வழியின்றி அங்கேயே காத்திருந்தனர்.
இதையடுத்து இரவு 7 மணிக்கு அமைச்சர் காந்தி, கலெக்டர் பிரபு சங்கர் திருமழிசை சமுதாய நலக்கூடத்துக்கு வந்திறங்கினர். இந்த வேளையில் அவர்களின் பின்னால் திமுக எம்எல்ஏ கிருஷ்ணசாமி காரில் வந்திறங்கினார். இதையடுத்து திமுகவினர் சுற்றி நிற்க காரில் இருந்து இறங்கிய கிருஷ்ணசாமி, ‛‛கலெக்டர் எங்க? எங்க இருக்கான் கலெக்டர்'' என ஆக்ரோஷமாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை தேடினார்.
அதன்பிறகு அவரை பார்த்த கிருஷ்ணசாமி, ‛‛ஏங்க.. நிகழ்ச்சி நேரத்தை மாற்றினால் உரிய முறையில் தகவல் தர முடியாதா. மக்கள் பிரதிநிதியை பார்த்தால் முதலில் மரியாதை கொடுக்கனும். முதலில் வணக்கம் வைக்க கத்துக்கோ'' என கூறினார். இதற்கு பிரபு சங்கர் எதிர்வினையாற்றாமல் அவரை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் எம்எல்ஏ கிருஷ்ணசாமி இறங்கி வரவில்லை. இதையடுத்து அமைச்சர் காந்தி சத்தத்தை உயர்த்தி எம்எல்ஏ கிருஷ்ணசாமியை சாந்தப்படுத்தினார்.
இதையடுத்து நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பொதுமக்களுக்கு அமைச்சர் காந்தி, எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் நிவாரண உதவிகளை வழங்கினர். இந்த வேளையில், ‛‛கலெக்டர் தன்னை பார்த்து முறைக்கிறார் என எம்எல்ஏ கிருஷ்ணசாமி கூறினார். இதற்கு பிரபு சங்கர், ‛‛நான் எங்க உங்களை முறைத்தேன்'' என கூற மீண்டும் பிரச்சனையானது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications