தீவிர புயலாக உருவெடுத்த ‘மோக்கா’..175 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.. எங்கெங்கு மழை? வானிலை அலெர்ட்!
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மோக்கா புயல் இன்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது. போர்ட் பிளேருக்கு மேற்கே 520 கி.மீ தொலைவில் மோக்கா புயல் மையம் கொண்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 175 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக வலுவடைந்தது. மோக்கா என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் இன்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது. மோக்கா புயல் வங்கதேசம், மியான்மர் அருகே போர்ட் பிளேருக்கு 520 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது நாளை மத்திய வங்கk கடலில் இருந்து படிப்படியாக அதிதீவிர புயலாக மாறி வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. மே 14-ஆம் தேதி தென்கிழக்கு வங்க தேசம் - வடக்கு மியான்மர் இடையே மோக்கா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 175 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மோக்கா புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று கூறியுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோக்கா புயல் காரணமாக மீனவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் ததுறை அறிவுறுத்தியுள்ளது. வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விசைப்படகுகள், மீனவர்கள் விரைவாக கரைக்கு திரும்ப வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications