Cyclone Montha: மொந்தா புயல் எங்கே இருக்கிறது? ஆந்திராவில் கரையை கடக்கும் இடம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும். இதற்கு மொந்தா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மொந்தா புயல் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Montha Cyclone

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் நிலை கொண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 27ஆம் தேதி புயலாக வலுபெறும். இதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மொந்தா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மொந்தா புயல் தீவிர புயலாக மாறி ஆந்திரா இடையே கரையை கடக்கும். காக்கிநாடா அருகே மசூலிப்பட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையைக் கடக்கும். தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமானுக்கு தென்மேற்கே 440 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 970 கி.மீ. தொலைவிலும் ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 1040 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

இந்த மொந்தா புயல் ஆந்திரா அருகே கரையை கடக்கும் போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். வரும் 27ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நேற்று (அக்டோபர் 24, 2025) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

இந்த வானிலை மாற்றத்தால், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு (அக்டோபர் 25 முதல் 27 வரை) மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

இன்று (அக்டோபர் 25): கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை (அக்டோபர் 26): விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 27: திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

இதற்கிடையில், நேற்று சென்னையில் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. மதுரை மாநகரில் நேற்றுப் பெய்த பலத்த மழையால் முக்கியச் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தில் மழை தீவிரமடையும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+