சிலிண்டர் விலை 1000 ரூபாய் உயர்வு.. மீம்ஸ் கிரியேட்டர்களையே ஆடிப்போக வைத்த முதல் சம்பவம்
சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.990.50 உயர்ந்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர் விலை அதிகரித்தபோதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை.. மேற்காசிய போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு வியாபாரிகளையும், ஓட்டலில் சாப்பிடும் பல லட்சம் மக்களையும் ஆடிப்போக வைத்துள்ளது.நெட்டிசன்கள் பலர் சிலிண்டர் விலை உயர்வு பற்றி கருத்துக்களை கூறி வருகிறார்கள். அவற்றினை பார்ப்போம்.
ஈரான் அமெரிக்கா பிரச்சனையால் கேஸ், பெட்ரோல் டீசலுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. வணிக சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.. வணிகசிலிண்டர் இத்தனை நாட்களாக கிடைக்காமல் இருந்த நிலையில், வணிக சிலிண்டரை 5500 முதல் 6500 வரை கொடுத்து கடைக்கார்ர்கள் வாங்கி பயன்படுத்தி வந்தார்கள். வேறு வழியில்லாமல் பலர் கடைகளை அடைத்து போட்டு வீட்டில் இருக்கிறார்கள். இப்போது அதிகாரப்பூர்வமாகவே சிலிண்டர் விலை 1000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது சிறு உணவகங்கள், ஓட்டல்கள் மற்றும் சிலிண்டரை நம்பி தொழில் செய்வோரை நிலைகுலைய வைத்துள்ளது.

இந்த சூழலில் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக நெட்டிசன்கள் பலர் கருத்துக்களை தெரிவித்த வருகிறார்கள். அவற்றினை பார்ப்போம்.. நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே சிலிண்டர் விலை ஏறியதற்கு கடைகளில் டீயின் விலை 15 ரூபாயாக ஏற்றினார்கள் இப்பொழுது தாறுமாறாக ஏறிய கேஸ் இன் விலையால் டீயின் விலை சுமார் 50 ரூபாய் வர செல்ல வாய்ப்பு இருக்கிறது இதனால் டி பிரியர்களில் பலருக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இன்னொரு நெட்டிசன், வணிக சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசின் நடவடிக்கை,பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக தாக்கும் மோசமான முடிவு. ஏற்கனவே பொருளாதார சுமையில் சிக்கி தவிக்கும் ஹோட்டல்கள்,தேநீர் கடைகள் மற்றும் சிறு தொழில் முனைவோர்கள் மீது மேலும் சுமையை ஏற்றுவது மக்கள் விரோத செயல் என்று கண்டித்துள்ளார்.
இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "கமர்ஷியல் சிலிண்டர் ரேட்தானே கூடிருக்குன்னு நினைக்கலாம். ஆனா ஹோட்டல், பேக்கரின்னு எல்லாமே ரேட் கூடும், அடுத்ததா பெட்ரோல், டீசல் ரேட்டை கூட்டிட்டா மொத்தத்தில அவ்ளோதான்.

எல்லாமே ரேட் கூடிரும், நமக்கு வருமானம் மட்டும் அதே பழைய வருமானம்தான். வார், வார் ன்னு காரணம் சொல்லி மொத்தமா நம்ம ரத்தத்தை உறிஞ்சிட்டு இருக்காங்க." என்று கூறியுள்ளார்.

மூன்றாவதாக ஒரு நெட்டிசன், ஏற்கனவே வணிக சிலிண்டர் தட்டுபாடு பாதி பிசினஸ் போச்சி இனி பேச்சிலர்கள் வீடு வீடா போய் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டியது தான் ஆட்சியாடா நடத்துறீங்க" என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
நான்காவதாக ஒரு நெட்டிசன் கூறும் போது, " இதே காங்கிரஸ் ஆட்சில சிலிண்டர் விலை 50 ரூபாய் ஏத்தி இருந்தா கூட பிஜேபி காரணுங்க பாராளுமன்றத்தில் சிலிண்டரோட குதிச்சு இருப்பாங்க.. இவனுங்க உக்காந்து மிக்சர் தின்னுட்டு இருக்கானுங்க." என்று கடுமையான ஒருவர் கூறியுள்ளார்.

-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications