தமிழக பாஜக தலைவர் பதவி- போட்டியில் யாரும் நினைத்தே பார்க்காத இவருமாம்... வலம் வரும் 'வைரல்'
Recommended Video
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் ஏற்கனவே பல பேர் இருக்கும் நிலையில் தமிழக பாஜக துணைத் தலைவர் குப்புராமை முன்னிறுத்தி சமூக வலைதளங்களில் லாபி செய்யும் வகையில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராகிவிட்டார். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து தமிழக பாஜகவின் தலைவர் யார்? என பட்டிமன்றம் நடந்து வருகிறது. இதில் உச்சகட்டமாக நடிகர் ரஜினிகாந்த் பெயரும் கூட அடிபட்டது.
இந்நிலையில் பாஜகவின் துணைத் தலைவராக இருக்கும் குப்புராமின் பெயரையும் அவரது ஆதரவாளர்கள் இந்த போட்டியில் இணைத்துள்ளனர். குப்புராமை புகழ்ந்து எழுதப்பட்ட ஒரு பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அதில், சேதுசமுத்திரத் திட்டத்துக்கு எதிராக கடுமையாக போராடியவர் குப்புராமு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழக பஞ்சாயத்து தலைவர்களின் தலைவராக தேர்வு பெற்ற RSS காரர்..4 கிராமங்களை மதம் மாற்ற திட்டமிட்ட மதமாற்ற கும்பலின் சதியை ஒற்றை ஆளாக முறியடித்தவர் என அப்பதிவு நீள்கிறது.
2014 லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 1.7 லட்சம் வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தவர் குப்புராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்











Click it and Unblock the Notifications