மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?
சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வாழ்வில் "அகவிலைப்படி" என்பது வெறும் வார்த்தை கிடையாது.. அது அவர்களின் பொருளாதார பாதுகாப்பின் ஒரு முக்கியமான அங்கமாகும். டியர்னஸ் அலவன்ஸ் (DA) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த அகவிலைப்படியின் முக்கியத்துவம் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது? அரசு ஊழியர்களுக்கு எந்த அளவுக்கு பேருதவியாக இருக்கிறது? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
முதலில் அகவிலைப்படி எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்... இது ஏதோ ஒரு குத்துமதிப்பான கணக்கு கிடையாது.. நுகர்வோர் விலை குறியீட்டு எண் எனப்படும் சிபிஐ (CPI) தரவுகளை அடிப்படையாக கொண்டு இது நிர்ணயிக்கப்படுகிறது.

அதாவது, ஒரு சாதாரண மனிதன் அன்றாடம் பயன்படுத்தும் உணவு, உடை, எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை மார்க்கெட்டில் எந்தளவு உயர்ந்துள்ளது என்பதை மத்திய அரசு உன்னிப்பாக கவனிக்கும்.
மத்திய அரசு ஊழியர்கள்
தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் இந்த விலைப் புள்ளி விவரங்களின் அடிப்படையில், ஆண்டுக்கு 2 முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அடிப்படை சம்பளத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக இது கணக்கிடப்பட்டு ஊழியர்களின் கையில் வந்து சேர்கிறது.
இப்படி அகவிலைப்படியால் ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் ஏராளம். இதன் முதன்மையான பயன் என்னவென்றால், பணவீக்கத்தின் பிடியில் இருந்து ஒரு ஊழியரின் வாங்கும் திறனை இது பாதுகாக்கிறது. விலைவாசி உயரும்போது கையில் கிடைக்கும் பணம் அதிகரிப்பதால், குடும்ப செலவுகளைச் சமாளிப்பதில் பெரிதாக நெருக்கடிகள் ஏற்படுவதில்லை.
50 சதவீதம் அகவிலைப்படி தாண்டினால்?
அதுமட்டுமல்ல, இந்த அகவிலைப்படி உயர்வு என்பது வெறும் தற்காலிக உயர்வு மட்டுமே அல்ல, இது 50 சதவீதத்தை நெருங்கும்போது, அது ஊழியர்களின் இதர படிகளான HRA என்று சொல்லப்படும் வீட்டு வாடகைப்படி போன்றவற்றிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது... அதுவும் ஓய்வூதியதாரர்களுக்கு இது அகவிலை நிவாரணம் (DR) என்ற பெயரில் வழங்கப்பட்டு, அவர்களின் முதுமைக்கால தேவைகளுக்கும் பேருதவியாக இருக்கிறது.
மொத்தத்தில் இந்த அகவிலைப்படி என்பது ஏறும் விலைவாசிக்கு ஏற்ப, சம்பளத்தையும் ஏற்றித் தரும் ஒரு சமன்பாடு போலாகும்.. இது ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை நிலையாக வைத்திருக்க உதவுவதுடன், நாட்டின் பொருளாதார சுழற்சிக்கு ஏற்ப அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது.
பொதுவாக விலைவாசி ஏறும்போதெல்லாம் சாதாரண நடுத்தரக் குடும்பங்கள் தங்கள் கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை ஒவ்வொன்றாகச் செலவு செய்ய வேண்டிய நிலை வரும். ஆனால், சரியான நேரத்தில் உயர்த்தி தரப்படும் இந்த அகவிலைப்படி, அந்த சேமிப்புப் பணத்தை செலவு செய்ய விடாமல் பாதுகாக்கிறது.
சம்பள உயர்வு அறிவிப்பு
அதுவும், பண்டிகை நேரங்களிலோ அல்லது பிள்ளைகளின் படிப்பு செலவு அதிகமாகும் போதோ இந்த சம்பள உயர்வு அறிவிப்பு வந்தால், அது அந்த குடும்பங்களுக்கு பெரிய நிம்மதியை தருகிறது. நம்முடைய அரசுக்கு இது கூடுதல் செலவாக தெரிந்தாலும், நாட்டின் வேலைகள் சரியாக நடப்பதற்கும், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் இது மிகவும் அவசியமான ஒன்று.
அதனால்தான், ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்போது, அது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications