Aadhav: டெய்சி அறிக்கையை பார்த்தீங்களா? ஆதவ் மீது குறையே சொல்லலை! பரஸ்பரமாக பிரிவதாக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக அறிவித்துள்ள அவரது மனைவி டெய்சி, ஆதவ் மீது எந்தவொரு குறையையும் சொல்லாமல் பரஸ்பரமாக பிரிய முடிவு செய்துள்ளது அவரது அறிக்கையிலேயே தெரிகிறது.

டெய்சி, லாட்டரி அதிபர் மார்ட்டின்- லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் தம்பதியின் மகளாவார். ஆதவ்வும், டெய்சியும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக டெய்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் வாழ்வில் இணைந்து பயணித்தோம். அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த அந்த பயணத்தில் நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைவர்களாகவும், பெற்றோர்களாகவும் வாழ்க்கையின் பல்வேறு அத்தியாயங்களை கடந்து வந்தோம்.

Daisy Martin

பரஸ்பர உடன்பாடு

இன்று ஆதவ் அர்ஜுனாவும், நானும் பரஸ்பரமாக பிரிந்து தனித்தனி பாதைகளில் பயணிப்பது என முடிவு செய்துள்ளோம். இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய தொடக்கம் என்றாலும் எங்கள் குழந்தையைச் சிறந்த முறையில் வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சியையும் நலனையும் உறுதி செய்வதிலும் நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். இவையே எங்களது தலையாய முன்னுரிமையாக எப்போதும் இருக்கும்.

ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் தேர்ந்தெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். இந்த கடினமான காலகட்டத்தை புரிந்து கொண்டு உங்கள் புரிதலையும், அன்பையும், எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான மதிப்பையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக டெய்சி தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து எந்த ஒரு குறையையும் சொல்லாமல் டெய்சி பிரிந்திருக்கிறார்.

டெய்சி- ஆதவ் சந்திப்பு எப்படி?

லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின்- அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் ஆகியோரின் மகள்தான் டெய்சி. கோவையை பூர்வீகமாகக் கொண்ட இவர்களது குடும்பம் பல்வேறு வணிக நிறுவனங்களை நடத்தி வருகிறது.

ஆதவ் அர்ஜுனா கூடைப்பந்து வீரர்

ஆதவ் அர்ஜுனா ஒரு கூடைப்பந்து வீரர. இவர் விளையாட்டு சார்ந்த நிகழ்வுகளுக்கு சென்ற போது பொதுவான நண்பர்கள் மூலம் டெய்சி மார்ட்டின், ஆதவ்விற்கு அறிமுகமானார். இருவரும் நண்பர்களாகினர். பின்னர் இருவருக்கும் இடையே நட்பு காதலமாக மாறியது.

இதையடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

வாய்ஸ் ஆப் காமன்ஸ்

திருமணத்திற்கு பிறகு, ஆதவ் அர்ஜுனா, தனது மாமனாருக்கு சொந்தமான மார்ட்டின் குழும நிறுவனங்களில் நிர்வாக பொறுப்புகளை ஏற்றார். பிறகு வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் என்ற அரசியல் வியூக நிறுவனத்தையும் தொடங்கினார். இதையடுத்து அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச் செயலாளராக பணியாற்றினார்.

அப்போதெல்லாம் விசிக திமுக கூட்டணியில் இருந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஆதவ் அர்ஜுனா, "தமிழகத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒருவர் முதல்வராகிவிடக் கூடாது" என துணை முதல்வராக இருந்த உதயநிதியை மறைமுகமாக விமர்சித்திருந்தார். அது போல் "விசிக இல்லாமல் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும்" என குரல் எழுப்பினார்.

உதயநிதி மீது விமர்சனம்

ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் குறித்தும் ஆதவ் பேசியுள்ளார். " சினிமா உலகில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆதிக்கம் நிலவுகிறது" என விமர்சித்திருந்தார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்டவை குறித்து ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார். இதனால் திமுக தலைவர்களும் ஆதவ்விற்கு கண்டனங்களை தெரிவித்தனர். கூட்டணி தர்மத்தை மீறி ஆதவ் செயல்படுவதாக தெரிவித்தனர். இதனால் தர்மசங்கடத்திற்கு சென்ற திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவை 6 மாத காலத்திற்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.

விசிகவில் இருந்து விலகல்

இதையடுத்து விசிகவில் இருந்து ஆதவ் விலகினார். பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இணைந்தார். அங்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஆதவ், பொதுப் பணித் துறை, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+