புரிஞ்சுக்குங்க.. மோசமான விளைவை ஏற்படுத்தும்.. நதிநீர் உரிமையும் பறிபோகும்.. டிடிவி தினகரன் கண்டனம்
அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: நாடாளுமன்ற இரு அவைகளிலும் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.. முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே சட்டமாகவும் அது நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இன்று, அணை பாதுகாப்பு மசோதா, மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது...

மசோதா
நீண்ட விவாதத்திற்கு பிறகு, மாநிலங்கவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்படவும் உள்ளது.. நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி, இந்த அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மசோதா தாக்கல்
நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அரசியல் சாசனத்திற்கு எதிராக, மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் இந்த மசோதா இருப்பதாக கூறி, தமிழக எம்பிக்கள் திருச்சி சிவா, டிகேஎஸ். இளங்கோவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்... ஆனாலும், நீண்ட விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டது.

ஸ்டாலின்
இதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். "கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில அரசின் அதிகாரங்களுக்கும் எதிரான அணைப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும், மாநிலங்களில் உள்ள மக்கள் நாடாளுமன்றத்தில் அளித்த பெரும்பான்மையை கொண்டு மாநிலங்களுக்கு எதிராகவே சட்டமியற்றி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் மத்திய பாஜக அரசு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை" என்றும் முதல்வர் ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கண்டனம்
அந்தவகையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தன்னுடைய கண்டனத்தை ட்வீட் போட்டு பதிவு அந்த ட்வீட்டில், "பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அணை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் நதிநீர் உரிமைகள் பறிபோகும் வகையில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு வரும் நிலையில், இந்த மசோதா மாநிலங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மாநிலங்கள்
மத்தியில் ஆட்சியாளர்கள் நடுநிலையோடு செயல்படாத போது, தற்போது மாநிலங்களிடம் இருக்கும் அணைகளின் கட்டுப்பாடும் அவர்களின் கைகளில் சென்றுவிட்டால் நிலைமை என்ன ஆகும்?? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. நாட்டின் கூட்டாட்சி முறைக்கு எதிராக எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசிடமே குவிக்கும் இத்தகைய செயல்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications