"இவரை ஏன் எனக்கு கட்டி வச்சீங்க".. கட்டி போட்டு தலையிலேயே சுட்ட மருமகள்.. சென்னை பரபரப்பின் உச்சம்!

சென்னையில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதில் கொலையாளி சிக்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஒரு நோயாளி புருஷனை ஏன் தலையில கட்டி வெச்சீங்க" என்று மாமனாரை கட்டிப்போட்டு விட்டு கேள்வி எழுப்பி உள்ளார் மருமகள் ஜெயமாலா.. அதற்குபிறகுதான் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டு தள்ளி உள்ளார்.. சென்னையில் 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இந்த மருமகள் பற்றிதான் பல பகீர் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் தலித்சந்த்.. 74 வயதாகிறது.. மனைவி பெயர் புஷ்பா பாய்.. அவருக்கு 70 வயதாகிறது.

இவருக்கு ஷீத்தல் என்ற மகன், பிங்கி என்ற மகள் உள்ளனர்.. மகன் ஷீத்தலுடன் ஒரு அப்பார்ட்மென்ட்டில் குடியிருந்து வந்தார். ஷீத்தல் கல்யாணமாகி மனைவியை பிரிந்தவர். மனைவி பெயர் ஜெயமாலா.. இப்போது கணவனுடன் சண்டை போட்டுக் கொண்டு புனேவில் இருக்கிறார்.

 கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

ஜெயமாலா - ஷீத்தல் தம்பதிக்கு கல்யாணமாகி 13, 11 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்... தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வந்ததால், டைவர்ஸ் கேட்டுள்ளார் ஜெயமாலா. இது தொடர்பாக ஜீவனாம்ச வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ராஜஸ்தான், மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார். அதாவது அந்த சொத்தின் மதிப்பு 5 கோடி ரூபாயாம்.

 கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

ஜெயமாலா - ஷீத்தல் தம்பதிக்கு கல்யாணமாகி 13, 11 வயதுகளில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்... தம்பதிக்குள் கருத்து வேறுபாடு வந்ததால், டைவர்ஸ் கேட்டுள்ளார் ஜெயமாலா. இது தொடர்பாக ஜீவனாம்சம் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அப்போது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ராஜஸ்தான், மற்றும் சென்னையில் உள்ள சொத்துக்களை எழுதி தருமாறு ஜெயமாலா கேட்டு வந்துள்ளார். அதாவது அந்த சொத்தின் மதிப்பு 5 கோடி ரூபாயாம்.

 மாமனார்

மாமனார்

மொத்த சொத்தையும் எப்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் எழுதி தர முடியும் என்று மாமனார் மறுத்துள்ளார்.. அதனால் மருமகள் கேட்டபடி சொத்து எழுதி தர ஒப்புக்காள்ளவில்லை.. இதுதான் வாக்குவாதமாக தொடர்ந்து வந்துள்ளது. நேற்று முன்தினமும் அப்படித்தான் புனேவில் இருந்து, தன்னுடைய 2 அண்ணன்கள், சித்தப்பா, மாமா என 5 பேருடன் வீட்டிற்குள் நுழைந்தார் மருமகள் ஜெயமாலா.

கல்யாணம்

கல்யாணம்

தன்னுடைய மாமனாரிடம் "ஒரு நோயாளியை எனக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வெச்சீங்க.. உங்க மகனால்தான் என் வாழ்க்கையே நாசமாகிவிட்டது.. அதனால்தான் ரூ.5 கோடி ஜீவனாம்சம் வேண்டும்.. சொத்திலும் பங்குதர வேண்டும்" என்று சண்டை போட்டாராம். அதற்கு மாமனார், நீங்க எல்லாரும் இங்கிருந்து உடனே வெளியே போங்க.. எதுவா இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக்கலாம்.. கேஸ் தான் நடந்துட்டு இருக்கு இல்லே" என்று சொல்லி உள்ளார்.

 ஜெயமாலா

ஜெயமாலா

இதுதான் ஜெயமாலாவுக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது.. அவர்களை தாக்க முயன்றுள்ளார் ஜெயமாலா.. இதனால் அதிர்ச்சி அடைந்த மாமனார், போலீசுக்கு தகவல் சொல்ல செல்போனை எடுத்துள்ளார்.. அதை பார்த்ததும் மேலும் டென்ஷன் ஆன ஜெயமாலா, கணவன், மாமனார், மாமியாரின் கைகளை, கயிறு கொண்டு கட்டினார்.. தான் கையோடு கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து, 3 பேரையும் துப்பாக்கியால் நெற்றிப்பொற்றில் சுட்டு கொன்றார். 3 பேரும் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.

மாமனார்

மாமனார்

இதில் முதலில் துப்பாக்கி குண்டுக்கு பலியானது தலில் சந்த்.. அடுத்து புஷ்பா பாய்.. அடுத்து, தப்ப முயன்ற கணவர் ஷீத்தல்.. தலில் சந்த்தின் தாடை பகுதியிலும், புஷ்பா பாய் நெற்றியிலும், ஷீத்தலின் தலை உச்சியிலும் குண்டு பாய்ந்ததற்கான அடையாளம் உள்ளது... 3 பேரையும் கொன்றுவிட்டு, உயிர் பிரிந்துவிட்டது என்று உறுதியானதும், எந்தவித பதற்றமும் இல்லாமல் ஜெயமாலா உள்ளிட்டோர் புறப்பட்டு சென்றுள்ளனர்.. இது அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

விமானம்

விமானம்

இதில் இன்னொரு வேலையையும் ஜெயமாலா செய்திருக்கிறார்.. போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க இவர்கள் காரில் ஒரு குரூப்பாகவும், ரயிலில் ஒரு குரூப்பாகவும் புனேவில் இருந்து கிளம்பி வந்துள்ளனர்.. இப்போது இவர்களை கைது செய்ய தனிப்படை போலீஸார் விமானம் மூலம் புனே சென்றனர்... அதேபோல, காரில் சென்று கொண்டிருக்கும் நபர்களை பிடிக்க 2 தனிப்படையும், ரயிலில் சென்ற நபர்களை பிடிக்க மற்றொரு தனிப்படையும் முடுக்கி விடப்பட்டன.. இதற்காக ரயில்வே போலீஸ் உதவியையும் போலீஸார் நாடினர்.

 நகை, பணம்

நகை, பணம்

3 பேரையுமே ஜெயமாலாதான் சுட்டுக்கொன்று இருக்கலாம் என்று போலீசார் வலுவாக சந்தேகப்படுகிறார்கள். எனினும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதால் விரைவில் பிடிபடுவார்கள், உண்மை வெளிவரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.. 3 பேரையும் கொன்றுவிட்டு, வீடு முழுக்க தேடி நகை, பணத்தையும் சாவகாசமாக எடுத்து கொண்டு போயுள்ளார் ஜெயமாலா.. ஆனால் துப்பாக்கியால் சுடும்போது, அந்த சத்தம் வெளியே கேட்டுள்ளது.. அந்த தெரு முழுக்க பட்டாசு வெடித்து கொண்டு இருந்ததால், இதுவும் தீபாவளி பட்டாசு என்றே மக்கள் நினைத்துவிட்டனராம்! இந்நிலையில், புனேவில் சம்பந்தப்பட்ட ஜெயமாலா உட்பட 3 பேரையுமே போலீசார் கைது செய்துவிட்டார்களாம்.!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+