மகள் சவுந்தர்யா திருமணத்தில் கும்மியாட்டம்... குடும்பத்துடன் ரசித்த ரஜினி.. வைரல் வீடியோ
Recommended Video

சென்னை: தமது மகள் சவுந்தர்யாவின் திருமணத்தில் பெண்கள் ஆடிய கும்மியாட்டத்தை குடும்பத்தினருடன் அமர்ந்து ரஜினிகாந்த் பார்த்து ரசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
சென்னையின் பிரபல தனியார் ஓட்டலில் சரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

சவுந்தர்யாவிற்கு இது மறுமணம் என்பதால், மகனுடன் அமர்ந்து தாலி கட்டிக் கொண்ட நிகழ்வும் இத்திருமணத்தில் நடந்தது. திருமணத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர், தமிழருவி மணியன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் திருமணத்தில் பங்கேற்றனர். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், மு.க.அழகிரி, பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மணமக்களை வாழ்த்தியதோடு, இருவருக்கும் டாக்டர் மு.வரத ராசனார் எழுதிய திருக்குறள் தெளிவுரை என்ற புத்தகத்தை பரிசாக அளித்தார். ரஜினிகாந்தின் உறவினர்களும் திரையுலக பிரபலங்களுமான கஸ்தூரி ராஜா, செல்வராகவன், தனுஷ், இசை அமைப்பாளர் அனிருத், ஆகியோரும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணத்தில், ரஜினியின் குடும்ப வழக்கப்படி பெண்களின் கும்மியாட்டம் இடம் பெற்றது. அவர்களின் கும்மியாட்டத்தை தமது குடும்பத்தினருடன் அமர்ந்து ரஜினிகாந்த் ரசித்தார்.அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
மகள் சவுந்தர்யா திருமணத்தில் கும்மியாட்டம்... குடும்பத்துடன் ரசித்த ரஜினி.. வைரல் வீடியோ#SoundaryaRajinikanth #Vishagan #Rajinikanth #SoundaryaWedsVishagan #ViralVideo pic.twitter.com/AjBXUyLjBP
— Oneindia Tamil (@thatsTamil) February 11, 2019
-
‘துரந்தர் 2’ படத்தை பார்த்து ரஜினி போட்ட போஸ்ட்.. இயக்குனர் செய்த எதிர்பாராத சம்பவம்! குவியும் கமெண்ட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications