வாத்தி கம்மிங்.. செம ஆட்டம் போட்ட டேவிட் வார்னர்.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சூப்பரான ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்தியர்களுடன் பல்வேறு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு நெருங்கி தொடர்பு உண்டு. ஜாண்டி ரோட்ஸ், லாரா, ப்ரோவோ, கில்கிறிஸ்ட் என சொல்லிக்கொண்டே போகலாம்.
குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் பலர் பங்கேற்க தொடங்கிய பிறகு இந்தியர்களுடன் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பலர் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள். இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, பாடல்கள் , சினிமா , உணவு என பல விஷயங்கள் அவர்களை வெகுவாக கவர்ந்துவிடுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அந்த நாட்டின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவருக்கு இந்தியாவின் பல்வேறு விஷயங்கள் பிடிக்கும் . பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடுவது, இந்திய உணவுகளை விரும்பி உண்பது, இந்திய படங்களை அதிகம் பார்ப்பது என மனிதர் கிட்டத்தட்ட இந்தியராகவே வாழ்ந்து வருகிறார்.

அடிக்கடி நடனம்
டேவிட் வார்னருக்கு கிரிக்கெட்டை தாண்டி இந்திய திரைப்படங்கள் மீது ஆர்வம், அதிகம் இந்திய நடிகர்களின் பாடல்களுக்கு ஆட்டம் என்று செம்ம சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார் வார்னர். தெலுங்கின் பயங்கர ஹிட்டான, புட்டபொம்மா பாட்டுக்கு இவர் போட்ட குத்தாட்டம் வேர்ல்ட் ஃபேமஸ் ஆக இருந்தது இந்த வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் சினிமா பாட்டுக்கு அவர் ஆடும் வீடியோவை கேட்டு கோரிக்கை வைக்க தொடங்கினர்..

டேவிட் வார்னர் நடனம்
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அவ்வப்போது டிக்டாக் வீடியோ போட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் தேனியைச் சேர்ந்த டிக்டாக் அருணன் போல், நெற்றி நிறைய விபூதி பட்டை, கழுத்தில் தாயத்து என சூப்பர் கெட்அப்பில் வார்னர் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்தார்.

சும்மா கிழி
அதன்பிறகு சிட்டி ரோபாவாக மாறி அசத்தினார். அதன்பிறகு பாகுபலியாக, அமீர்கானாக இப்படி பல வேடங்களுக்கு மாறி பதிவிட்டார். தர்பார் ரஜினி இப்போது டேவிட் வார்னார் தர்பார் படத்தில் ரஜினி ஆடும் சும்மா கிழி பாடலுக்கு தான் நடனமாடுவது போல் மாற்றப்பபட்ட பேஸ்ஆப் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார்கள்,

விஜய் பாட்டு
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு டேவிட் வார்னர் சூப்பரான ஒரு ஆட்டம் போட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications