இதென்ன கலாட்டா.... திமுக மாணவர் அணி செயலாளர் பதவிக்கு காய்நகர்த்தும் தயாநிதி மாறன்?
சென்னை: திமுகவில் கனிமொழிக்கு கட்சி தலைமையே புதிய பதவி கொடுக்க போகிறது என்கிற தகவல் பரபரத்துக் கொண்டிருக்க... தங்களுக்கு மாணவர் அணி செயலாளர் பதவியை கொடுங்க என காய்நகர்த்திக் கொண்டிருக்கிறராம் தயாநிதி மாறன்..
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனசாட்சியாக வாழ்ந்து மறைந்தார் முரசொலி மாறன். எம்.பியாக, மத்திய அமைச்சராக பதவி வகித்தாலும் அத்துடன் அவர் ஒதுங்கிக் கொண்டது இல்லை.
கட்சி விவகாரங்களில் கருணாநிதியை விட கறார் காட்டியவர்; பொதுக்குழு, செயற்குழுவில் பாரபட்சமே பார்க்காமல் செயல்படாதவர்களை கடுமையாக வெளிப்படையாக விமர்சிக்க தயங்காதவர். கட்சி அமைப்புகளில் கருணாநிதி, அன்பழகன் என்கிற வரிசை இருந்தாலும் கருணாநிதிக்கு அடுத்ததாக முரசொலி மாறன்தான் கோலோச்சினார்.

தயாநிதிக்கு பதவிகள்
முரசொலியார் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் தயாநிதிக்கு எம்.பி பதவி கொடுத்தார்; மத்திய அமைச்சர் பதவி பெற்றுக் கொடுத்தார் கருணாநிதி. ஆனால் கட்சிப் பதவிகளில் மாறன் குடும்பத்தை உள்ளே நுழைக்காமல் கவனமாகவே இருந்து வந்தார் கருணாநிதி.

குடும்பத்தில் கலகம்
அதுவும் கருணாநிதி குடும்பத்துக்குள் கலகம் ஏற்படுத்துகிற வகையில் கருத்து கணிப்பு வெளியிட போய், மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் இந்த விரிசல் உச்சமடைந்தது. என்னதான் கண்கள் பணிக்க கருணாநிதி- மாறன் குடும்பங்கள் இணைந்தாலும் மாறன் குடும்பத்தினரிடம் இருந்து கருணாநிதி குடும்பம் கொஞ்சம் தள்ளித்தான் நின்று வருகிறது.

திமுகவுக்குள் காய்நகர்த்தல்
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் இருந்தே திமுக கட்சிப் பதவிகள் அல்லது அறக்கட்டளைகளில் ஏதேனும் ஒன்றில் நுழைந்துவிட முடியுமா? என்பது மாறன் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது திமுக மகளிர் அணி செயலாளராக கனிமொழி, இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இருக்கின்றனர்.

மாணவர் அணி செயலாளர்?
இவர்களைப் போல தங்களுக்கும் ஒரு அணியின் செயலாளர் பதவி வேண்டும் என எதிர்பார்க்கிறதாம் தயாநிதி மாறன் தரப்பு. இருந்தபோதும் ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லையாம்.

காத்திருக்க ரெடி
பொதுவாக அந்த கசப்பான காலத்துக்குப் பின்னர் திமுகவுடன் வசந்த காலத்தைத்தான் மாறன் குடும்பம் பேணி வருகிறது. அதனால் கட்சி பதவி வந்தால் வரட்டும் இல்லையெனில் வழக்கம் போல செயல்படுவோம் என்கிற மனநிலையிலும் மாறன் குடும்பம் இருக்கிறது என்கிற கருத்தையும் திமுகவினரே கூறுகின்றனர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications