ரேஷன் டூ ஆதார்.. பான் கார்டு டூ பிறப்பு சான்றிதழ்.. உங்ககிட்ட இருக்கா? உடனே எடுத்துக்கிட்டு ஓடுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய அடையாள ஆவணங்களில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் முடிய உள்ளது. அதன்படி ரேஷன் கார்ட் தொடங்கி பிறப்பு சான்றிதழ் வரை பல முக்கியமான ஆவணங்களுக்கான காலக்கெடு, புதிய அட்டை வாங்குவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ரேஷன் கார்ட், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் தொடர்பாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வெளியிட்டு உள்ள தேதிகளை இங்கே பார்க்கலாம்.

Tamil Nadu Government Notification ration

ரேஷன்: தமிழ்நாடு முழுக்க புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. புதிதாக 2 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் தினமும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.

ஆதார் அட்டை: ஆதார் விவரங்களை திருத்த கால அவகாசம் செப்டம்பர் 14ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. 30 நாட்களில் இதற்கான இறுதி டெட் லைன் நிறைவு பெறுகிறது.

தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி அடுத்த ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி வரை விவரங்களைத் திருத்தலாம். முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த மாதம்தான் அதற்கான கடைசி வாய்ப்பு . முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் இந்த அவகாசம் மார்ச் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இதற்கான அவகாசம் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது. ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

பிறப்பு சான்றிதழ்: 15 வயது நிரம்பியவரா நீங்கள் ? பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெற்று விட்டீர்களா?
கடைசி வாய்ப்பு. குழந்தை பிறந்து 15 வருடங்கள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளுக்காக, தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-இல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் (01.01.2020 முதல் 31.12.2024 வரை) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இது போன்ற கால அவகாச நீட்டிப்புகள் வழங்கப்பட இயலாது என இந்திய தலைமைப்பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் அட்டை: விரைவில் நாடு முழுக்க பாண் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

அதன்படி தற்போது தனியார் நிறுவனங்கள், சிறிய சிறிய அமைப்புகள் கூட பான் கார்டு விண்ணப்பம் செய்ய வழி உள்ளன. ஆதார் போல தனியாக மையங்களாக செயல்படாமல்.. சிறிய சிறிய கடைகளில் கூட பான் கார்டு விண்ணப்பங்களை செய்யும் வசதிகள் உள்ளன.

அதை மாற்ற சாமத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி இனி பான் கார்டுகளை முறையாக அனுமதி பெற்று மட்டுமே விண்ணப்பிக்க செய்ய வசதியாக விரைவில் நாடு முழுக்க பாண் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாம்.

பல தனியார் நிறுவங்களிடம் இருந்து பான் விண்ணப்பிக்கும் அனுமதியை பறிக்க முடிவு செய்துள்ளாராம். ஆதார் அட்டை போலவே .. இனி பான் அட்டைகளையும் முறையாக விண்ணப்பிக்க சென்டர்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+