என்னருமைத் தங்கைகள், சகோதரிகள்.. ஒரே நாளில் பாசத்தை அள்ளிப் பொழிந்த விஜய், உதயநிதி, அண்ணாமலை
சென்னை: தமிழ்நாட்டு பெண்கள் மீது இன்று ஒரே நாளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பாசமழை பொழிந்து, "என்னருமைத் தங்கைகள், சகோதரிகள்" என உருகி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கைப்பட எழுதி வெளியிட்ட அறிக்கை: அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழத்தில் தாய்மார்கள் என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே.
அதற்காகவே இக்கடிதம்.. எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம். இவ்வாறு தவெக தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அரசுப்பள்ளிகள் மட்டுமன்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியரும், மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுகிற வகையில், புதுமைப் பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்து, மாண்புமிகு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள்.
ஏற்கனவே, மாதந்தோறும் 2.98 லட்சம் மாணவியர் இத்திட்டத்தால் பயன்பெற்று வரும் நிலையில், இனி கூடுதலாக 75 ஆயிரம் மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறவுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் வெற்றிக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதமே சாட்சி. சமூகத்தில் சரி பாதி இருக்கும் பெண்களின் கல்விக்கு நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும். புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கம் மூலம், பயன்பெறுகின்ற அத்தனை தங்கைகளுக்கும் என் அன்பும், வாழ்த்தும்! இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் பதிவு: தமிழக சகோதரிகள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைக் கண்டும் காணாமலும், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் செயல்படும் திமுக அரசைக் கண்டித்து, கண்களைக் கட்டிக் கொண்டு போராடும் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்திய தமிழக பாஜக மகளிர் அணி சகோதரிகளுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு, கைது நடவடிக்கை என்ற திமுக அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், நமது பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ












Click it and Unblock the Notifications