2 நாட்கள் விடுமுறைக்கு பின்.. மீண்டும் கூடும் தமிழ்நாடு சட்டசபை.. இன்றும் பட்ஜெட் மீதான விவாதம்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது. இன்றும் பட்ஜெட் மீதான விவாதம் தொடர உள்ள நிலையில், நாளை பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கடந்த 20ம் தேதி கூடியது. அன்றைய தினம் 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதையடுத்து 21ஆம் தேதி 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டசபை கூட்டத்தொடர்
இதைத் தொடர்ந்து 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் ஆகிய 2 பட்ஜெட்கள் மீது விவாதம் நடந்தது. இதனிடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேபோல் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது.

மீண்டும் கூடும் சட்டசபை
இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. காலை 10 மணிக்கு சட்டசபை கூடியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும். எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேச உள்ளனர். தொடர்ந்து 2 பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெறும். நாளை பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்க உள்ளனர்.

மானியக்கோரிக்கை
மேலும் 2023-2024ஆம் ஆண்டு செலவினத்திற்கான முன்பண மானியக்கோரிக்கையும், கூடுதல் செலவிற்கான மானியக்கோரிக்கை பேரவையில் வைக்கப்படும். தொடர்ந்து 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. முதலாவதாக வரும் 29ஆம் தேதி காலையில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானியக்கோரிக்கையும், பிற்பகலில் போக்குவரத்து மானியக்கோரிக்கையும் நடக்கிறது.

புதிய அறிவிப்புகள்
30ஆம் தேதி உள்ளாட்சி துறையும், ஊரக வளர்ச்சி துறையும், 31ஆம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறையும், ஏப்ரல் 1ஆம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிடுவார்கள்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications