சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களுக்கு Coimbatore தான் வேணுமுங்க... Koyampuththoor வேண்டாமுங்க- இப்படியும் சில குரல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு அறிவித்திருக்கும் கோயம்புத்தூர் - Koyampuththoor பெயர் மாற்றத்தை ஏற்க முடியாது; ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் Coimbatore என்பதையே பயன்படுத்துவோம் என சமூக வலைதளங்களில் குரல்கள் எதிரொலித்து வருகின்றன.

Recommended Video

    பெயரை மாற்றிய தமிழக அரசு... கொந்தளித்த நெட்டிசன்ஸ்

    தமிழக அரசு 1018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கில எழுத்துக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது. இதன்படி ஊர்களின் பெயர் தமிழில் எப்படி உச்சரிக்கப்படுகிறதோ அதேபோல் ஆங்கிலத்திலும் எழுதுவதற்காக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

    Coimbatore இல்லை Koyampuththoor.. 1018 ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல உச்சரிக்க, எழுத அரசாணை Coimbatore இல்லை Koyampuththoor.. 1018 ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல உச்சரிக்க, எழுத அரசாணை

    Thindukkal

    Thindukkal

    உதாரணமாக தமிழில் திண்டுக்கல் என்று உச்சரிப்பது ஆங்கிலத்தில் DINDIGUL என்று எழுதப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி இனி Thindukkal என எழுத வேண்டும். இதை ஒருவகையில் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனாலும் DINDIGUL என்பது நன்றாகத்தானே இருக்கிறது என அங்கலாய்க்கின்றனர் சீனியர்ஸ்.

    E Chittor

    E Chittor

    இதே திண்டுக்கல் மாவட்டத்தில் எ. சித்தூர் (எரியோடு சித்தூர்) என்பதை ஆங்கிலத்தில் A. Chittor என மாற்றி எழுத அரசு உத்தரவிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் எரியோடு சித்தூர் என்பதை ஆங்கிலத்தில் எழுதினால் Eriyodu Chittoor என்றுதான் எழுத வேண்டும். எப்படி A Chittoor என வரும்? இப்படியும் சில குழப்பங்கள்.

    Coimbatore - Koyampuththoor

    Coimbatore - Koyampuththoor

    சில ஊர்களின் தலைப்பெழுத்து மிக பொருத்தமானதாக இருக்குமாறும் அரசாணையில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வரிசையில்தான் Coimbatore என்பது இனி Koyampuththoor என மாற்றி எழுத வேண்டும் என்கிறது அரசு ஆணை. ஏற்கனவே CBE, KOVAI என சுருக்கெழுத்துகளில் கோவை அழைக்கப்பட்டு வருகிறது. தற்போது Koyampuththoor என புதியதாக எழுத வேண்டும் என்கிறது அரசாணை.

    மாறும் குரல்கள்

    மாறும் குரல்கள்

    தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் பரவலாக உள்ளது. ஏற்கனவே எழுதி வந்த Coimbatore என்பதே எங்களுக்கு கம்பீரம் என்கின்றனர். அதனால் நாங்கள் Koyampuththoor என்பதை எழுதப் போவதில்லை என ஏதோ புத்தாண்டு தீர்மானம் போல கங்கணம் கட்டுகின்றனர். இதற்கும் கூட நெட்டிசன்களிடை எதிர்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    A heated debate over the Places English name changes in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X