பெரியார்.. அண்ணாமலை சொன்னார்..'துக்ளக்' குருமூர்த்தி செய்தார்.. ட்விட்டரில் சர்ச்சை போட்டோ பதிவுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை பெரியார் சிலை விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மேடையில் பேசியதை ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி போட்டோக்களாக பதிவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஶ்ரீரங்கம் கோவில் முன்பாக உள்ள பெரியார் சிலையை தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த முதல் நொடியில் அகற்றுவோம் என்றார். மேலும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நிறைய அறிக்கைகள் கொடுத்திருக்காங்க. இப்ப ஒரு விவாதத்துக்கு மூத்த பத்திரிகையாளர், தத்துவார்த்தவாதி சோ சொன்ன கருத்தை முன்வைக்கிறேன். பெரியார் அவர்கள் இந்துமதத்துக்கு எதிராக சொன்ன கருத்தை கோவிலுக்கு வெளியே வைக்கலாம் என அரசியல் கட்சிகள் சப்போர்ட் செய்தால், பெரியார் அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக சொன்ன கருத்தை கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆபீசுக்கு வெளியே வைக்கலாமா? இவர்களுக்கு ஒரு நியாயம்.. இந்துக் கோவில்களுக்கு ஒரு நியாயம் கிடையாது. பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி சில கருத்துகளை சொல்லி இருக்கிறார். அதனை நான் சொல்ல விரும்பவில்லை. சோ அவர்கள் சொன்ன கருத்தை கூகுள் பண்ணி பார்த்தா தெரியும். அதேபோல திமுக பற்றி 'பக்கம் 21'-ல் சொன்னதை திமுக அலுவலகத்துக்கு வெளியே வைப்போம். காங்கிரஸ் ஒழிக்கப்பட வேண்டும் என பெரியார் சொன்னதை காங்கிரஸ் அலுவலகத்துக்கு வெளியே வைப்போம். அதை இந்த கட்சிகள் ஒப்புக் கொள்வார்களா? என கேட்டிருந்தார்.

Debate over Thuglak Editor Gurumurthys Controversial Social Media Posts

இதனைத் தொடர்ந்து ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியருமான எஸ்.குருமூர்த்தி தமது எக்ஸ் பக்கத்தில், "ஈவேரா கம்யூனிஸ்டு பற்றி கூறியதை அண்ணாமலை கூறியது போல கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பொறித்தால் எப்படி இருக்கும் என்று துக்ளக் பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு அனுப்பிய வாட்ஸ்அப்"; ஈவேரா காங்கிரஸ் பற்றி கூறியதை அண்ணாமலை கூறியது போல சத்தியமூர்த்தி பவனில் பொறித்தால் எப்படி இருக்கும் என்று துக்ளக் பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு அனுப்பிய வாட்ஸ்அப்; ஈவேரா திமுக பற்றி கூறியதை அண்ணாமலை கூறியது போல திமுக அலுவலகத்தில் பொறித்தால் எப்படி இருக்கும் என்று துக்ளக் பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு அனுப்பிய வாட்ஸ்அப்" என அடுத்தடுத்து பதிவிட்டு சர்ச்சைக்குரிய வாசகங்களுடனான படங்களையும் பதிவு செய்திருக்கிறார். எஸ்.குருமூர்த்தியின் இந்த பதிவு மீது கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Debate over Thuglak Editor Gurumurthys Controversial Social Media Posts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+