மக்கள் மனதில் தாக்கம்! ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.க்கு தண்டனை? பரிசு? கூடிப் பேசும் சாமானியர்கள்!
சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து கூட்டுறவுத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டது பற்றித் தான் பட்டித்தொட்டி எங்கும் இப்போது ஒரே பேச்சாக உள்ளது.
அந்தளவுக்கு அரசியல்வாதிகளுக்கு இணையாக வெகுஜன மக்கள் மத்தியில் பரிச்சயம் பெற்றவராக திகழ்கிறார் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
அரசுத்துறை செயலாளர்களிலேயே சாமானியர்கள் மனதிலும் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அதிகாரியாக இருக்கிறார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

டிரான்ஸ்ஃபர்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் நடைபெற்ற நிலையில் அதில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். டிரான்ஸ்பர் மட்டும் கூடுதல் கவனம் ஈர்த்திருந்தது. சுகாதாரத்துறையில் இருந்து அவர் கூட்டுறவுத்துறைக்கு மாற்றப்பட்டது ஏன், அதன் பின்னணி என விவாதங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. இந்த இடமாற்றம் அவருக்கு தண்டனையா அல்லது பரிசா என டீக்கடைகளில் கூட தினசரி நாளிதழ்களை வைத்துக் கொண்டு பட்டிமன்றங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன.

நட்பு பாராட்டியவர்
அந்தளவுக்கு கொரோனா பற்றி பேசி பேசி ஊடகங்கள் மூலம் அவர் மக்கள் மத்தியில் பரிச்சயம் பெற்றிருக்கிறார். தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிலேயே மிக அதிகளவில் பேட்டிகள் கொடுத்த பெருமையும் ராதாகிருஷ்ணனையே சேரும். எந்தவொரு கேள்விக்கும் தடுமாற்றமின்றி பதில் தரக்கூடிய திறமையை பெற்றிருந்தவர். பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஊடகத்தினரை சந்திக்கவே அச்சப்படும் சூழலில், ஊடகத்தினருடன் நட்பு பாராட்டியவர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

எதிர்பார்க்கப்பட்ட இடமாற்றம்
இந்நிலையில் இப்போது நடைபெற்றுள்ள இந்த இடமாற்றத்தால் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.க்கு எந்த கவலையும் இல்லையாம். இன்னும் சொல்லப்போனால் தன்னை சுகாதாரத்துறையில் இருந்து வேறு துறைக்கு அரசு மாற்றாதா என அவரே எதிர்பார்த்து காத்திருந்ததாக கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கொரோனா.. கொரோனா.. எனப் பேசி மருந்து, மாத்திரை, தடுப்பூசி, என நிற்க நேரமின்றி பரபரப்பாகவே ஓடிக்கொண்டிருந்ததால் அவருமே ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருந்திருக்கிறார்.
Recommended Video

டிரான்ஸ்பர் பரிசு
இதனால் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸை பொறுத்தவரை கூட்டுறவுத்துறைக்கு தன்னை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டதை தனக்கு கிடைத்த பரிசாகவே கருதுகிறாராம். ஆனால் அதற்குள் இந்த இடமாற்றத்தை வைத்து ஆளுக்கொரு தலைப்பில் தங்கள் கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications