டிசம்பர் மாதமே கலைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகள்! அடுத்து உள்ளாட்சி தேர்தல்தான்! தமிழக அரசு முடிவு?
சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான பணிகளை தொடங்கி உள்ளது மாநில தேர்தல் ஆணையம். இந்த மாதமே உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் பிப்ரவரிக்குள் தேர்தலை நடத்த தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்கிறார்கள்.
2024 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளுக்கு முன்பாக வேகமாக தேர்தல் பணிகளுக்கான காய்களை திமுக நகர்த்தி வருகிறது அதே சமயம் இன்னொரு பக்கம் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை நடத்துவது அல்லது தள்ளிப்போடுவது தொடர்பாக திமுக அரசு இறுதி முடிவு எடுக்காமல் இருக்கிறது. திமுக சீனியர்கள் யாருக்கும் இந்த தேர்தலை நடத்துவதில் விருப்பமில்லை. தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தலை நடத்த ஆளும் திமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் வாக்குப்பெட்டிகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019ல் 27 மாவட்டங்களில் நடந்த தேர்தல் நடந்தது. தேர்வான நபர்களின் பதவி காலம் வரும் டிசம்பருடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில்தான் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனியர்கள்: அதே சமயம் தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து ஸ்டாலினிடம் பலமுறை வலியுறுத்தியும் வந்துள்ளனர் சீனியர்கள். அதே சமயம், மாவட்ட, ஒன்றிய அளவிலான திமுகவினரோ, டிசம்பரில் தேர்தலை நடத்தியாக வேண்டும் என தலைமைக்கு தங்களின் விருப்பத்தை தெரிவித்தபடி இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சிக்கான தேர்தலை நடத்துவதற்கு தயாராகும் வகையில், ஜனவரி 1, ஏப்ரல் 1 , ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய மாதத் தேதிகளை அடிப்படையாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
சட்டசபை தேர்தல்: இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்கள் உள்ளன. 20 மாதங்கள் தேர்தலுக்கு இருந்தாலும் திமுக வேகமாக மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
இக்குழுவில், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இளைஞரணி செயலாளராக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், அடுத்த சட்டப்பேரவை தேர்தலை ஒருங்கிணைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.
மீட்டிங்: 2026 சட்டசபை தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கட்சியில் அமைப்பு நீதியாக சீரமைப்பை மேற்கொள்வது பற்றி ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்த முறை உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது. கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்க போவது உதயநிதி ஸ்டாலின்தான் என்பது இந்த மீட்டிங் மூலம் தெரிய வந்துள்ளது.
பிளான்கள்: 2024 சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆளும் திமுக இப்போதே செய்ய தொடங்கிவிட்டது.
கூட்டணியை ஒருங்கிணைப்பது. திமுக கூட்டணியை இதேபோல் காத்து வைக்க முடிவு செய்துள்ளதாம். இரண்டாவதாக எதிர்கட்சிகளை தவிடுபொடியாக்கும் வகையில் பென் அமைப்பு மூலம் பல சர்வேக்களை எடுக்க முடிவு செய்துள்ளனர் தேர்தலில் முடிவுகளை மாற்றும் பகுதிகள், சாதி ரீதியிலான வாக்குகள் என்று பல விஷயங்களை இந்த சர்வே மூலம் எடுக்க உள்ளனராம். கடைசியாக திமுக கூட்டணி 200+ இடங்கள், திமுக கூட்டணி 170+ இடங்களை வெல்வது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்ள ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். இதற்காக கட்சியில் அமைப்பு ரீதியிலான மாற்றங்களை செய்வது பற்றியும் ஸ்டாலின் பேசி உள்ளாராம்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications