அண்ணாவை திமுகவை விட்டு நீக்க தீர்மானம்? திமுகவை உடைக்க சதி? அன்று சம்பத் செய்தது என்ன?
சென்னை: திமுக தொடங்கப்பட்டு 13 ஆண்டுகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணாதுரையைக் கட்சியைவிட்டு நீக்கச் சம்பத் தீர்மானம் கொண்டு வந்தார். அது வெற்றி பெற்றதா? அன்று நடந்தது என்ன?
இன்றைய இளம் தலைமுறைக்கு டிஎம்கே என்றால் மிக எளிதாகத் தெரியும். இந்தளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்று விரித்துச் சொன்னால் கூட தெரியுமா என்று தெரியவில்லை. அந்தளவுக்கு இந்தப் பெயர் சுருக்கம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தக் கட்சியில் பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. பலர் இந்தக் கட்சியிலிருந்து பிரிந்துபோய் தனிக் கட்சி தொடங்கி இருக்கிறார்கள். திமுக தொடங்கப்பட்ட காலத்தில் அண்ணாதுரை அதன் பொதுச்செயலாளராக இருந்தார்.

1949 செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அவர் கட்சியை அறிவித்த போது கட்சிக்கு தலைவர் பதவி இல்லை என்றார். அதற்குக் காரணம், அது பெரியாருக்கு உரிய இடம். அவர்தான் எங்களுக்கும் தலைவர் என்று அறிவித்தார். அதுவரை இப்படியான ஒரு கொள்கையை யாரும் அறிவித்தது இல்லை. அதிலும் அண்ணாதுரை புதுமையைக் கையாண்டார்.
அதன் பிறகு அண்ணாதுரையின் மீது மனக் கசப்பு ஏற்பட ஈவிகே சம்பத், அண்ணாதுரையை திமுகவை விட்டு நீக்க முடிவு செய்தார். அண்ணாதுரைதான் கட்சியின் நிறுவனர். அவரையே ஒருவர் கட்சியை விட்டு அகற்றும் அளவுக்கு துணிந்தார் என்றால் சும்மா அல்ல. அந்தளவுக்கு அண்ணாதுரை கட்சிக்குள் ஒரு ஜனநாயகத்தை உருவாகி வைத்திருந்தார். கட்சியின் பொதுச் செயலாளராக அவர் இருந்தால் கூட, தனது தொண்டர்களை அவர் தம்பி என்று உறவுமுறை வைத்தே அழைத்தார். 'தம்பி வா! தலைமையேற்க வா' என்று தனது கட்சித் தொண்டர்களைக் கட்சிக்குத் தலைமை தாங்க அழைத்த அண்ணாதுரையைத்தான் சம்பத் கட்சியை விட்டு நீக்க முடிவு செய்தார்.
திராவிடர் கழகத்திலிருந்து பெரியார் மீது இருந்த மனக் கசப்பால் விலகித் தனிக் கட்சி கண்ட அண்ணாதுரை, சாமானியர்களின் தலைவராக இருந்தார். தனது சாதியைச் சேர்ந்தவர்களுக்கு அதிக இடம் கொடுத்தால் இது முதலியார் கட்சி என மக்கள் நினைத்துவிடுவார்கள் என அஞ்சினார். ஆகவே, தொழிலாளி முதல் முதலாளி வரை பலரையும் கட்சிக்குள் அரவணைத்தார். கடவுள் இல்லை என்று பெரியாரின் கொள்கையை ஏற்று நடந்த அண்ணாதுரை, தனதுக் கட்சியின் கொள்கை 'ஒன்றே ஒருகுலம் ஒருவனே தேவன்' என்று வகுத்தார்.
திமுக தொடங்கப்பட்ட பிறகு 1957இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகு இவருக்கும் அண்ணாதுரைக்குமான உரசல் தொடங்கியது. திமுகவை நிறுவிய 5 முக்கிய தலைவர்களில் இருவராக இருந்த சம்பத், 'அறிஞர் அண்ணாதுரை என்று அழைத்து வந்த நான் இனிமேல் திருவாளர் அண்ணாதுரை என்று அழைக்கப் போகிறேன்' என்று அறிவித்தார் என்று இராம அரங்கண்ணல் தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார். அதைக் கேட்ட அண்ணாதுரை, ' என்னைத் தானே என் தம்பி அப்படி அழைக்கப்போகிறேன் என்கிறான். அவன் எப்படி அழைத்தாலும் நான் அண்ணாதுரைதானே?' என்று மறுமொழி சொன்னார். கூடவே குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்றார் அண்ணா.
சம்பத் திமுகவை விட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் கட்சிக்குப் பெரியார்தான் தலைவர் என்று சொன்ன அண்ணாதுரை ஒரு கட்டத்தின் சம்பத்தைக் கட்சியின் அவைத்தலைவராக நியமித்தார். அப்படிப்பட்ட சம்பத் வேலூரில் கூட இருந்த பொதுக்குழுவில் அண்ணாதுரையை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்தார். திமுக தான் அண்ணா. அண்ணாதான் திமுக என்பதுதான் உண்மை. அவரையே தூக்க முடிவு செய்தபோது அண்ணாதுரை பதறிப் போனார். 'கழகம் நாம் எல்லாம் சேர்ந்து எழுப்பிய வீடப்பா' என்று இராம அரங்கண்ணலிடம் அண்ணாதுரை கவலையுடன் தெரிவித்தார்.
கட்சி இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது காஞ்சிபுரம் வீடு.. திராவிட நாடு ஏடு.. எழுதப் பேனாவும் பேடும் போதும் என்று வருத்தப்பட்டுச் சொன்னார் அண்ணா. கட்சியினர் தன்னை நீக்கப் போவதாகச் செய்த முடிவை எண்ணி, 'திராவிட நாடு' ஏட்டில் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார் அண்ணா. அந்தக் கட்டுரைக்குப் போட்டியாகக் கண்ணதாசன் நடத்திய 'தென்றல்' இதழில் ஈவிகே சம்பத் 'அண்ணாவின் மன்னர்' என்று எழுதினார். கட்சிக்குள் சம்பத் போட்ட முதல் குண்டு இதுதான் என்கிறார் அரங்கண்ணல். அது புயலாக மாறியது.
வேலூரில் 22.06.1962இல் கூடிய செயற்குழுவில் சம்பத் எரிமலையாக வெடித்தார். கூச்சல் குழப்பம் அதிகமானது. ஆர்.எம்.வீரப்பனும் அரங்கண்ணலும் ஒரு பக்கம் பொதுக்குழுவில் சம்பத் மீது நம்பிக்கை இல்லை எனப் பலரிடம் கையெழுத்து வாங்கினார்கள். செயற்குழு முடிந்ததும் பொதுக்குழு கூடியது. பொருளாளரான கருணாநிதி கட்சியின் வரவு செலவுக் கணக்கைத் தாக்கல் செய்தார். ஆந்திர பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரக்குப்பத்தை சேர்ந்தவர்கள் கட்சி நிதியாக சம்பத் மூலம் 1000 ரூபாய் வழங்கி இருந்தனர். அது கணக்கில் 800 ரூபாய் என வரவு வைக்கப்பட்டு இருந்தது.. ஆகவே அந்த ஊர் நிர்வாகிகள் கூச்சல் போட்டனர். மீது 200 எங்கே எனக் கேள்வி எழுப்பினர். ரசீதையும் காட்டினர்.
மேலும் கோடம்பாக்கம் இந்தி எதிர்ப்பு மாநாட்டின் மிச்ச தொகை 30 ஆயிரம் எங்கே என்றார் மற்றொருவர். அதுவும் சம்பத் வசம் இருந்தது. அண்ணாதுரையை நீக்க வேண்டும் எனக் கனவுடன் வந்த சம்பத் தலையில் ஒரு பெரிய இடி விழுந்தது. பலரும் சம்பத் விலகவேண்டும் என்றனர். அரங்கண்ணல் குழுவினர் சம்பத்துக்கு எதிராக வாங்கிய ஆதரவு கையொப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. ஒன்று செய்ய முடியாத சம்பத், தனது அவைத்தலைவர் பதவி உட்பட உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
அண்ணாதுரையின் அன்பு வென்றது. திமுகவின் தலையும் தப்பியது.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications