கூட்டணி தற்கொலைக்கு சமம்.. திராவிடத்தை கொன்று புதைப்பேன்.. விஜய் அறிவிப்பால் சீமான் ஆவேசம்
சென்னை: தேர்தல் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமமானது; அதற்கு பேசாமல் விஷம் குடித்துவிட்டே படுத்துவிடலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அறிவித்த நிலையில் சீமான் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இம்மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், பிளவுவாத சக்தியான பாஜகவும் ஊழல்வாதிகளான திமுகவும்தான் சித்தாந்த, அரசியல் எதிரிகள் என அறிவித்தார். மேலும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்; தவெக ஆட்சியில், அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு உண்டு எனவும் அறிவித்தார். அதேபோல திராவிடமும் தமிழ்த் தேசியமும் தங்களது இரு கண்கள் என்றார் விஜய்.
நடிகர் விஜய் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு சிறிய கட்சிகள், கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது முதலே 'தம்பி விஜய்' என பாசமாக அழைத்து வந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், நேற்றைய பேச்சைத் தொடர்ந்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.
இது தொடர்பாக சீமான் கூறுகையில், தந்தை பெரியார் மட்டுமே பெண்ணுரிமைக்காக போராடவில்லை. வேலுநாச்சியார் போராடும் போது தந்தை பெரியாரே பிறக்கவில்லை. பாரதியாரைப் போல பெரியாரும் பெண் உரிமைக்காகப் போராடினார். அவ்வளவுதான். திராவிடமும் தமிழ்த் தேசியமும் தமது கண்கள் என்கிறார் விஜய். அவரது கட்சியின் கொள்கைகள் நாம் தமிழர் கட்சிக்கு ஒத்துவராதவை; எதிரானவை என்றார்.
மேலும் கூட்டணி என்பதே தற்கொலைக்கு சமமானது. கொள்கைகளில் உடன்பாடு இல்லாத போது எதற்காக கூட்டணி வைக்க வேண்டும்? கூட்டணி என முடிவெடுத்துவிட்டால் அது ஒவ்வொரு கட்சிக்கும் தற்கொலைக்கு சமமானதுதான். அதற்கு விஷம் குடித்துவிட்டு படுத்துவிடலாம். ஏன்?
உங்க தனித்துவத்தை இழந்துவிடுவீர்கள். உங்க கூட்டணிக் கட்சித் தலைவர் கோபித்துக் கொள்வார் என நினைத்தால் நீங்கள் என்ன பேசுவீர்கள்? நீங்க செய்கிற தவறுகளுக்கு எல்லாம் நான் வக்காலத்து வாங்கி பேசனுமா? முட்டுக் கொடுக்கனுமா? அதை ஏற்பீர்களா நீங்கள்? கூட்டணி வைத்தால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்கிறீர்கள்.. கட்சியை காப்பாற்றுவதுதான் லட்சியம் என்றால் எந்த லட்சியத்தை காப்பாற்ற கட்சியை தொடங்குனீங்க? எனக்கு அதில் உடன்பாடு இல்லை..
கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு நான் தோற்றுதான் போகிறேன்.. உங்களுக்கு என்ன இழப்பு? என் முன்னோர்கள் செய்த தவறை நான் செய்யமாட்டேன்.. எங்க கட்சியை உருவாக்கிய சிபா ஆதித்தனார், மபொசி என எல்லா தமிழ்த் தேசிய அரசியல் முன்னோர்கள் எல்லாம் திராவிடத்தில்தான் கரைந்தனர். அந்த திராவிட பூதம் தின்று விழுங்கிவிட்டது. நான் ஒருத்தன்தான் திராவிடத்தை கொன்று புதைக்க வந்தவன். அப்ப என்னையாவது சுதந்திரமாக விடவேண்டும். என்னை ஏன் கூட்டணிக்கு போ என்கிறீர்கள்? இவ்வாறு சீமான் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications