கேஸ் சிலிண்டரின் விலை குறைந்தது.. மாதம் துவங்கியதுமே அதிரடி.. ஆனா இல்லத்தரசிகள் நினைச்சது போல இல்லயே
சென்னை: கேஸ் சிலிண்டர்களின் விலையானது, நீண்ட காலமாகவே நிலையானதாக உள்ளது. இந்த முறையும் சிலிண்டரின் விலை குறைந்தால் நல்லது என்று நுகர்வோர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.. தீபாவளி பண்டிகைக்கே குறையும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்தது. இந்நிலையில் மாத துவக்கத்தில் எப்படியும் வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றம் தென்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மட்டுமே மாற்றம் தென்பட்டுள்ளது. அதற்கான விலையும் தற்போது வெளியாகியிருக்கிறது.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோகத்துக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் கேஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.

கச்சா எண்ணெய் விலை
இந்த நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அல்லது 2வது நாளில் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன. அதாவது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையின் மாற்றத்தை கருத்தில்கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துவிட்டதால், இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானித்து வருகின்றன..
எப்போது விலை குறையும்
அந்தவகையில் சமையல் சிலிண்டர்களின் விலை நீண்ட காலமாகவே மாறவில்லை. அதாவது உயர்ந்த நிலையிலேயே உள்ளது.. எப்போது விலையில் மாற்றம் தென்படும் என்று கஸ்டமர்கள் எதிர்பார்த்தபடியே உள்ளனர்.
கடந்த மாதம் எப்படியும் தீபாவளி பண்டிகைக்கு விலை குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்டோபர் 1ம் தேதி சிலிண்டர் விலை வெளியான நிலையில, வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.16 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன்படி சிலிண்டர் ரூ.1,754க்கு விற்பனையானது.
கடந்த செப்டம்பர் 1ம் தேதி 51.50 ரூபாயும், ஆகஸ்ட் 1ம் தேதி 33.50 ரூபாயும், ஜூலை 1ம் தேதி 58.50 ரூபாயும், ஜூன் மாதம் 24 ரூபாயும் விலை குறைந்தது... எனவே இந்த மாதமும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. மாறாக, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை 6 மாதங்களுக்கு பிறகு உயர்ந்தது.
வீட்டு சிலிண்டரில் மாற்றம்
ஆனால் வீட்டு சிலிண்டரில் மாற்றம் செய்யப்படாமல் 868 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது.. இன்று நவம்பவர் 1ம் தேதி என்பதால், எப்படியும் இந்த மாதத்துக்கான விலை குறையும் என்று கணிக்கப்பட்டது.
குறிப்பாக, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை உயரலாம் என்றும் இந்த விலை மாற்றங்கள் மக்களின் மாத பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் முன்கூட்டியே சலசலக்கப்பட்டது.
எதிர்பார்த்தபடியே மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.4.50 காசு குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,750-க்கு விற்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகை நெருங்குது
ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமும் செய்யப்படவில்லை.. அதன்படி, ரூ.868.50-க்கு பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
சிலிண்டர் விலை உயராவிட்டாமலும், அதே விலையில் விற்கப்படுவது இல்லத்தரசிகளுக்கு நிம்மதியை தந்து வருகிறது.. எனினும் பொங்கல் பண்டிகை நெருங்குவதால், வீட்டு சிலிண்டர்களில் விலை குறைந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications