31 மாவட்டங்களில் குறைந்து வரும் பாதிப்பு .. எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா வேகமாக குறைகிறது.. விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்றைப்போலவே இன்றும் 17 மாவட்டங்களில் 100க்கும் குறைவான நபர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 200க்கும் கீழாகவே உள்ளது சென்னை, கோவை, கடலூர், சேலம், திருவள்ளூர், , வேலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு 200க்கும் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் நேற்று 49,203 பேர் கொரோனா நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 48,482 மட்டுமே நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 6,185 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 10845 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3790 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவதாக கடலூர் மாவட்டத்தில் 3489 பேரும், செங்கல்பட்டில் 2380 பேரும் சேலத்தில் 2067
பேரும், ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 25 மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெறுகிறார்கள்.

5 மாவட்டங்களில் அதிகம்

5 மாவட்டங்களில் அதிகம்

தமிழகத்தில் செப்டம்பர் 10ம் தேதி நிலவரப்படி மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை இப்போது பார்ப்போம். சென்னையில் கொரோனாவால் இன்று 991 பேர் பாதிக்கப்பட்டுளளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 440 பேரும், சேலத்தில் 300 பேரும், திருவள்ளூரில் 291 பேரும், கடலூரில் 263 பேரும், செங்கல்பட்டில் 279 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைவான பாதிப்பு

குறைவான பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் 87 பேரும், ஈரோட்டில் 32 பேரும், கள்ளக்குறிச்சியில் 113 பேரும், கன்னியாகுமரியில் 173 பேரும், திருவண்ணாமலையில் 81 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 61 பேரும், நாகப்பட்டினத்தில் 130 பேரும், புதுக்கோட்டையில் 99 பேரும், ராணிப்பேட்டையில் 118 பேரும், தர்மபுரியில் 124 பேரும், தஞ்சாவூரில் 190 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் அதிகம்

திருப்பூரில் அதிகம்

திருவாரூரில் 127 பேரும், தூத்துக்குடியில் 122 பேரும், திருநெல்வேலியில் 123 பேரும், திருப்பூரில் 155 பேரும், திருச்சியில் 130 பேரும், வேலூரில் 152 பேரும், விழுப்புரத்தில் 189 பேரும், விருதுநகரில் 31 பேரும், கிருஷ்ணகிரியில் 123 பேரும், கரூரில் 62 பேரும், நாமக்கல்லில் 123 பேரும், நீலகிரியில் 69 பேரும், ராமநாதபுரத்தில் 53 பேரும், அரியலூரில் 33 பேரும். பெரம்பலூரில் 29 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வளவு பலி எண்ணிக்கை

எவ்வளவு பலி எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மிகஅதிகபட்சமாக சென்னையில் 2921 பேர் பலியாகி உள்ளனர். செங்கல்பட்டில் 469 பேரும், திருவள்ளூரில் 459 பேரும், மதுரையில் 369 பேரும், கோவையில் 340 பேரும், காஞ்சிபுரத்தில் 278 பேரும் இதுவரை கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுதவிர சேலத்தில் 204 பேரும், விருதுநகரில் 201 பேரும், திருநெல்வேலியில் 192 பேரும் வேலூரில் 189 பேரும் கடலூரில் 164 பேரும் பலியாகி உள்ளனர், தமிழகத்திலேயே மிக குறைவாக நீலகிரியில் 14 பேர் பலியாகி உள்ளனர். பெரம்பலூரில் 18 பேர் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+