அசல் ஆவணங்கள் இன்றி பத்திரப்பதிவு.. இதென்ன? அவசரத்துக்கு சொத்துக்களை விற்க முடியாதே? பெயிரா கோரிக்கை
சென்னை: பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் ஆவணங்களை பதிவுக்கு தாக்கல் செய்யும்போது அதற்குண்டான முந்தைய அசல் ஆவணத்தை (ORIGINAL DOCUMENT) பதிவாளரின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்கிற 55A சட்டப்பிரிவு சம்பந்தமான உத்தரவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்று தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா கோரிக்கை விடுத்திருக்கிறது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, மக்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:

"தமிழகத்தை பொறுத்தவரைக்கும் சொத்துக்களை வாங்குகின்ற பொதுமக்கள் அதனுடைய முந்தைய அசல் ஆவணத்தை பதிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற பதிவுத் துறையின் சட்டப் பிரிவு 55A வில் சட்ட திருத்தம் மேற்கொண்டு கடந்த 2021 இல் பதிவுத் துறை (சுற்றறிக்கை எண்:.22482 / C1 / 2022 Dt.02.02.2023) ஆக நடைமுறைப்படுத்தியது.
அசல் ஆவணங்கள்
இதனை எதிர்த்து அசல் ஆவணங்களை தவறவிட்ட பல பொதுமக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பொது மக்களிடம் உள்ள தனிநபர் (PRIVATE DOCUMENT) சம்பந்தமான அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும், பதிவுத் துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிற பொது ஆவணத்தின் (PUBLIC DOCUMENT) அடிப்படையில் ஆய்வு செய்து வாங்குபவர் மற்றும் விற்பவர் மற்றும் சாட்சிகளை உறுதி செய்து பதிவு செய்ய வேண்டும் என பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து பதிவுத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவினை உறுதி செய்து அசல் ஆவணங்கள் பொதுமக்களிடம் இல்லை என்றாலும் பதிவுத்துறையினால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொது ஆவணத்தின் (PUBLIC DOCUMENT) அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும் என உறுதி செய்தது.
சரியான புரிதல் இல்லை - தெளிவுரையும் இல்லை
இதையடுத்து, பதிவு துறையின் கூடுதல் துணைத் தலைவரின் கடித எண் 44420/2025ன் மூலம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை கடைபிடிக்க கோரி அறிவுறுத்தி அனைத்து மண்டல பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் நிர்வாகம் மற்றும் தணிக்கை சார் பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தார்.
இருப்பினும் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் குறித்த சரியான புரிதல் மற்றும் தெளிவுரையும் இல்லையென தெரிவித்து பல சார் பதிவாளர்கள் அசல் ஆவணங்கள் இல்லாமல் பொதுமக்கள் தங்கள் சொத்துக்களை விற்பதற்காக பதிவாளர்களை அணுகும் சூழ்நிலையில் ஆவணத்தை பதிவு செய்ய மறுக்கின்றனர். இது சம்பந்தமாக பெயிரா கூட்டமைப்பின் சார்பாக FAIRA கடித எண்: 045/2025 தேதி:11.02.2025 அன்று விரிவாக பதிவுத்துறைக்கு கடிதம் எழுதி இருந்தோம்.
வழிகாட்டி நெறிமுறை சுற்றறிக்கை
பதிவுத் துறை தலைவர் அவர்களால் அசல் ஆவணத்தை ஒளி வருடல் செய்வது சம்பந்தமாக ஒரு வழிகாட்டி நெறிமுறை சுற்றறிக்கை எண்: 2492 l CA1 / 2024 நாள்:25.01.2025 என்கிற அடிப்படையில் வெளியிட்டிருப்பது மேலும் சார் பதிவாளர்களுக்கு அசல் ஆவணங்கள் இன்றி பதிவு செய்வது குறித்த விஷயத்தில் ஏற்கனவே தெளிவான புரிதல் இல்லாத சூழலில் குழப்பத்தில் இருந்து வந்த சார் பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை கூடுதல் துணைத் தலைவர் அவர்களின் கடித எண்: 44420/C1/2024 மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்துள்ளது.
அசல் ஆவணங்கள் இன்றி சொத்துக்களை பதிவு செய்யலாம் என்கின்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவினாலும் மற்றும் பதிவுத் துறை கூடுதல் துணைத் தலைவர் அவர்களின் கடித எண்: 44420/C1/2024 இன் அடிப்படையிலும், அசல் ஆவணங்கள் பொதுமக்களிடம் இல்லை என்றாலும் பதிவுத்துறையினால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொது ஆவணத்தின் (PUBLIC DOCUMENT) அடிப்படையில் பதிவு செய்யலாம் என்கின்ற அடிப்படையிலும் பொதுமக்கள் நிம்மதி அடைந்திருந்தனர்.
சொத்துக்களை அவசரத்துக்கு விற்க முடியாது
ஆனால், தற்பொழுது பதிவுத் துறை தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள அசல் ஆவணத்தை ஒளி வருடல் செய்வது சம்பந்தமான சுற்றறிக்கை எண்: 2492 l CA1 / 2024 நாள்:25.01.2025 இன் மூலம் பொதுமக்களும் குழப்பம் அடைந்து அவர்களின் சொத்துக்களை அவசர தேவைகளுக்கு கூட விற்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு இதன் காரணமாக பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.
மேலும் அசல் ஆவணங்களை தவறவிட்ட பொதுமக்கள் தங்களின் ஆவணங்களை பதிவு செய்ய இயலாததால் இதன் மூலம் பதிவுத்துறைக்கு வரும் வருவாயும் பெருமளவில் தடுக்கப்படுகிறது.
அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பதிவு
ஆகவே பதிவுத் துறை தலைவர், மேற்கண்ட பொதுமக்களின் நலனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பதிவுத் துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிற பொது ஆவணங்களின் (PUBLIC DOCUMENT) அடிப்படையிலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும், பதிவுத் துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிற பொது ஆவணங்களை (PUBLIC DOCUMENT) சரிபார்த்து பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுந்த வழிகாட்டி நெறிமுறைகளுடன் சுற்றறிக்கையினை வெளியிட்டு உதவிட வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், முன் அசல் ஆவணம் பரிசீலித்த பின்னரே ஆவண பதிவை மேற்கொள்ள வேண்டுமென்ற பதிவுச் சட்ட விதி 55ஏ என்பது பதிவுச் சட்டப் பிரிவுகளுக்கு மீறியது (ultra wire) என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடும் (உயர் நீதிமன்றம் பென்ச்) தள்ளுபடி செய்த பின்னர், பதிவுத் துறையால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்தும், இது குறித்து பதிவுத்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை கூட பிறப்பிக்கபடவில்லை என்பது தான் மிகுந்த வேதனை என்று பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications