தமிழக அரசு பஸ்களில் வேகவேகமாக நிரம்பும் "புக்கிங்"..தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கு எகிறும் கிராக்கி
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்ல, அரசு பஸ்களில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. இதனால், போதுமான அளவுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாமல் போய்விடும். எனவேதான், பொதுமக்களின் வசதிக்காக, இதுபோன்ற நாட்களில் சிறப்பு பேருந்துகளை, போக்குவரத்து துறை ஏற்பாடு செய்து வருகிறது.

வார விடுமுறை: அப்படித்தான் இப்போதும் தீபாவளி பண்டிகையை நெருங்குவதால், கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது... வரும் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயங்க கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,675 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து, மொத்தமுக 10,975 பஸ்கள் இயக்கப்பட உள்ளது,
அதேபோல, பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆக மொத்தம் 16,895 பஸ்கள் இயக்கப்படவுள்ளது.
சொந்த ஊர்: தீபாவளி முடிந்து, சொந்த ஊர்களிலிருந்து மறுபடியும் ஊர் திரும்பும் பயணிகளுக்கு, 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் தினசரி இயங்கக்கூடிய 2,100 பஸ்களுடன் 3,167 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 9,467 பஸ்களை இயக்கவும் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.. இதேபோல் பிற ஊர்களுக்கு 3,825 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 13,292 பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பொதுமக்கள், டிக்கெட்களை முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். நேற்றுகாலை வரையில், 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.. சென்னையில் இருந்து மட்டும், சொந்த ஊர் செல்வதற்கு 46,000 பயணிகள் இதுவரை ரிசர்வ் செய்திருக்கிறார்களாம்..
தீபாவளி பண்டிகை: அதுமட்டுமல்ல, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர், அரசு போக்குவரத்து கழகத்தில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதாம். தீபாவளியை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ரயில்களில் ஏற்கெனவே டிக்கெட்டுகள் விற்பனை முடிவடைந்துவிட்டதால், அரசு பஸ்களையே பொதுமக்கள் நம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications