டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
சென்னை: தீபாவளியை முன்னிட்டு, டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு, 8.33 சதவீதம் போனஸ், 11.67% கருணைத் தொகை வழங்கப்படும். எனவே மொத்தம் 20 சதவீதம் போனஸ் அவர்களுக்கு கிடைக்கும், என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு, தமிழக அரசின் கீழ் பணிபுரியும் பல்வேறு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிரந்தர ஊழியர்களாக இருக்கவேண்டும். 2018 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு அவர்கள் பணிக்கு சேர்ந்து இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் 20% போனஸ் வழங்கப்படும். அதிக அளவில் இந்த பிரிவில் தான் ஊழியர்கள், பணிபுரிவதால் 16 ஆயிரத்து 800 ரூபாய் வரை அவர்களுக்கு போனசாக கிடைக்கும். உடனடியாக வங்கி கணக்கிற்கு இந்த தொகை செலுத்தப்படும்.
28 ஆயிரம் ஊழியர்கள் இதனால் பயன் பெறுவர்.












Click it and Unblock the Notifications