தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா.. கவனிக்க வேண்டிய 10 விஷயம்.. இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: தீபாவளிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பின்வரும் 10 விஷயங்களை கவனிக்க வேண்டும்.
1. தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்லலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தி உள்ளார்.

2. பேருந்துகளில் செல்ல விரும்புவோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28/10/2024, 29/10/2024 மற்றும் 30/10/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து 11,176 பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டு மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
3. தீபாவளியை முன்னிட்டு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏழு சுங்கச்சாவடிகளில் உள்ள பூம் தடுப்புகளை NHAI அகற்றி உள்ளது. போக்குவரத்தை எளிதாக்கும் முடிவில் இந்த தடுப்புகள் அகற்றப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையானது காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
4. வாகனத்தின் அளவு வழக்கமான 35,000 இலிருந்து தினசரி 50,000 ஆக உயரும். இதனால் பூம் அகற்றப்பட்டு உள்ளது. ஆனால் வழக்கம் போல் டோல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று NHAI தெளிவுபடுத்தியுள்ளது.
5. தீபாவளிக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வெளியே செல்வதால் தாம்பரம், செங்கல்பட்டு, ஈசிஆர் சாலை கடுமையான போக்குவரத்து நெரிசலால் திணறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா வருடமும்.. எல்லா பண்டிகை தினங்களுக்கும் நடப்பது போலவே.. இந்த முறையும் சென்னையை இணைக்கும் சாலைகள் மூச்சுத்திணறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 நாட்களில் தீபாவளி பண்டிகை நடப்பதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
6. கிளாம்பாக்கத்தில் பேருந்து ஏற விரும்புபவர்கள்.. பின்வரும் மார்க்கத்தில் பயணிக்கலாம். திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக பட்டுக்கோட்டை மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.
7. பேருந்துகளில் வெடிகளுக்கு அனுமதி இல்லை.
8. ரயிலில் செல்ல விரும்புபவர்களுக்கு வெடிகள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.
9. பயணிகள் பேருந்து நிலையத்திலிருந்து 28/10/2024 முதல் 30/10/2024 வரை ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், 30/10/2024 கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 27/10/2024 மற்றும் 28/10/2024 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
10. பல லட்சம் பேர் வீடுகளுக்கு செல்ல உள்ளதால்.. மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications