மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை நலம் விசாரிப்பதற்காக, பிரதமர் என்னை தொடர்பு கொண்டார்.
பிரதமர் மோடியை மேடைக்கு அழைத்து வந்து நினைவுப்பரிசு வழங்கினார் முதல்வர்
சென்னை: "நீங்கள் ஓய்வெடுங்கள், நான் விழாவில் நிச்சயம் கலந்து கொள்வேன்" என மோடி பெருந்தன்மையோடு கூறியதாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய உரையில் கூறினார்.
Recommended Video
பிரதமர் மோடியை மேடைக்கு அழைத்து வந்த முதல்வர், பிரதமருக்கு மாமல்லபுரம் கோயில் வடிவ சிலையை பரிசளித்தார்.
பிரதமர், முதல்வர் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்து சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்... அப்போது, ஸ்டாலின் ஏதோ சொல்ல, அதனை கேட்ட பிரதமர் செல்லமாக விரலை நீட்ட, அவரது கையை பிடித்தபடி சிரித்தார் ஸ்டாலின்.

தோளை தொட்டு பேச்சு
தொடர்ந்து சிறிது நேரம் முதல்வரின் தோளில் தட்டிகொடுத்து சிரித்தபடி உரையாடிக்கொண்டிருந்தார்... பிறகு, ஒளிபரப்பான கலை நிகழ்ச்சிகள் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் விளக்கினார்.... செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்... இளம் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றினர்.

சான்ஸ்
பிறகு முதல்வர் தன் உரையில் ஒவ்வொரு தலைவரையும் வரவேற்று பேசியதாவது: 'அழைப்பிதழுடன் நேரில் சென்று பிரதமரை சந்தித்து, நேரில் அழைக்கலாம் என்று நான் திட்டமிட்டு இருந்தேன்.. ஆனால், இடையிலே எனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, நேரில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை மாண்புமிகு பிரதமர் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.. எனது நிலைமையை விளக்கினேன்.. அவர், பெருந்தன்மையோடு "நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்... நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றார்.

ஓய்வெடுங்கள்
அழைப்பிதழுடன் நேரில் சென்று பிரதமரை சந்தித்து, நேரில் அழைக்கலாம் என்று நான் திட்டமிட்டு இருந்தேன்.. ஆனால், இடையிலே எனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, நேரில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை நலம் விசாரிப்பதற்காக, மாண்புமிகு பிரதமர் என்னை தொடர்பு கொண்டார்.. என்னை நலம் விசாரித்தார்.. எனது நிலைமையை விளக்கினேன்.. அவர் பெருந்தன்மையோடு, "நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்... நான் நிச்சயம் கலந்து கொள்வேன் என்றார்..

கிராண்ட் மாஸ்டர்கள்
வழக்கமாக ஒலிம்பியாட் போட்டியை தொடங்க 18 மாதங்கள் ஆகும்.. சொன்னால் நம்ப மாட்டீங்க, வெறும் 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.. 4 மாதங்களில் பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது. தமிழகத்தின் கிராண்ட் மாஸ்டர்கள் சிறப்பானவர்கள்.. தமிழகத்தில் அதிக கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள்.. அறிவுக்கூர்மையும் வியூகமும் கொண்ட விளையாட்டு சதுரங்கம்..

அதிர்ஷ்டம்
ஆனால், அன்று அரசர்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்டது, இன்று மக்களின் விளையாட்டாக மாறியுள்ளது.. இது அதிர்ஷ்டத்தின் விளையாட்டு அல்ல, அறிவுத்திறனை வெளிப்படுத்தும் விளையாட்டு, மாணவர்கள் அனைவருக்கும் இந்த செஸ் விளையாட்டு போட்டியை கொண்டு சேர்க்க வேண்டும்..

பிரக்ஞானந்தா
தமிழ்நாட்டின் மதிப்பும், பெயரும் இன்று முதல் மேலும் உயரும். இந்தியாவில் உள்ள 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.... 2018ம் ஆண்டு மிக சிறிய வயதில் கிராண்ட் மாஸ்டராக புகழ்பெற்றவர் பிரக்ஞானந்தா. 36 சதவீதம் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் தமிழர்கள் தான். கீழடி அகழாய்வில் 2 வகையான ஆட்டக்காய்கள் கிடைத்தது.. இதுபோன்ற காய்கள் சதுரங்க ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது" என்றார் முதல்வர்












Click it and Unblock the Notifications