கடும் பனிமூட்டத்தில் சிக்கிய சென்னை.. விமானங்கள் தரையிறங்குவதில் தொடர் தாமதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அதிகாலையில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர், குவைத், மும்பை ஆகிய இடங்களிலிருந்து வந்த விமானங்கள் 30 நிமிடங்கள் தாமதமாக தரையிறங்கியுள்ளன.

சென்னையில் தொடர்ந்து வறண்ட காலநிலை நிலவுவதால் பனிமூட்டம் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக விமானங்கள் சரியான நேரத்தில் தரையிறங்க முடியாமல் தாமதமாக தரையிறங்கியுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும் மாநிலம் முழுவதும் பரவலாக பனி மூட்டம் காணப்படும் என்று தெரிவித்திருந்தது.

குறிப்பாக வட மாவட்டங்களில் பனி மூடடம் அதிக அளவில் இருக்கும் என்றும் ஆய்வு மையம் கூறியிருந்தது. அதாவது, இன்று முதல் முதல் 11ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காலைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வறண்ட வானிலை நிலவும். இந்த நாட்களில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்று ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

சென்னை

சென்னை

குளிரை பொறுத்த அளவில் சென்னை மக்கள் ஊட்டியில் இருப்பதை போல உணர்வதாக தெரிவித்துள்ளனர். இமயமலையிலிருந்து இந்திய பெருங்கடல் நோக்கி வீசும் குளிர் காற்றின் அலைதான் இதற்கு காரணம் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே அடுத்த 8 நாட்களுக்கு சென்னையில் இந்த குளிர் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியுள்ளது. "சென்னையில் ஜனவரி 15-16 தேதி வரையில் குளிர் தொடரும். அதேபோல இன்று சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரியாகும் இருக்கும்.

லேசான மழை

லேசான மழை

கடந்த 24 மணி நேரத்தில் பரங்கிப்பேட்டை, சிதம்பரம், அண்ணாமலை நகர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்திருக்கிறது" என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பனி மூட்டம் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ரன்வே சரியாக தெரியாததால் குறிப்பிட்ட நேரத்தில் விமானம் தரையிறங்காமல் வானில் வட்டமடித்தபடி இருந்திருக்கின்றன. பின்னர் சுமார் 30 நிமிடம் தாமதமாக விமானங்கள் தரையிறங்கியுள்ளன. குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் குவைத்திலிருந்து வந்த விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்துள்ளன.

வட மாநிலங்கள்

வட மாநிலங்கள்

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. டெல்லியின் சில இடங்களில் குளிர் சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் பதிவாகியுள்ளது. எனவே அந்நகரம் முழுவதுமே குளிரால் நடுங்கியுள்ளன. மட்டுமல்லாது விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இடங்களில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அருகில் இருக்கும் விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்படடுள்ளன. டெல்லி, ஹரியானா, பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 10 மீட்டரைவிட தொலைவில் இருக்கும் பொருட்கள் முற்றிலுமாக பனி மூட்டத்தால் மறைக்கப்பட்டுள்ளன.

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்

எனவே இந்த 5 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. கடும் பனி காரணமாக விமானம் மட்டுமல்லாது ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் பனி காரணமாக டெல்லியின் காற்றின் தரமும் மோசமடைந்து வருகிறது. இந்த குளிர் நாளை முதல் மெல்ல குறைய தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+