எதற்காக உங்களை தலைவராக்கினோம்னு மறக்காதீங்க.. நயினார் நாகேந்திரனுக்கு டோஸ் விட்ட டெல்லி.. ஏன்?
சென்னை: தமிழ்நாட்டில் திமுகவை எதிர்ப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என்று பாஜகவின் தேசியப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை நயினார் சந்தித்தபோதும், இல.கணேசனின் சாதாபிஷேக விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த பாஜகவின் தேசியப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷை நயினார் சந்தித்த போதும், ''திமுகவை எதிர்ப்பதில் உங்களிடம் வேகமில்லை. அவர்களிடம் காம்ப்ரமைஸ் ஆகியிருக்கிறீர்களா? எதற்காக உங்களை தலைவராக்கினோம் என்பதை மறந்துவிட்டீர்கள்.

உங்களுக்கு எதிராக இனி புகார்கள் வரக்கூடாது'' என்று எச்சரிக்கை செய்திருந்தனர். இந்த எச்சரிக்கையால் கொஞ்சம் உஷாராகியுள்ள நயினார், திமுகவை எதிர்த்து பேட்டியளித்தும், ஸ்டாலின், உதயநிதியை அட்டாக் செய்தும் அடிக்கடி பேட்டி கொடுக்கிறார்; எக்ஸ் தளத்தில் பதிவு செய்கிறார். இப்படி அவர் கொடுக்கும் பேட்டிகளையும், பதிவு செய்யப்படும் பதிவுகளையும் தொகுத்து பாஜகவின் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள் நயினாரின் ஆதரவாளர்கள். குறிப்பாக, திமுகவை எதிர்த்து அவர் கொடுடுக்கும் பேட்டிகள் இடம்பெறும் பத்திரிகைக் கட்டிங்குகளைத் தொகுத்து தனது ஆதரவாளர்கள் மூலம் டெல்லிக்கு தொடர்ச்சியாக அனுப்பி வருகிறாராம் நயினார் நாகேந்திரன்.
எடப்பாடி நயினார் ஆலோசனை
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழக சட்டமன்ற வளாகத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி அறையில் அவரும் நயினாரும் சந்தித்து 30 நிமிடங்கள் பேசியது அரசியலில் உற்று கவனிக்கப்பட்டது. கூட்டணி ஆட்சி; துணை முதல்வர் என்றெல்லாம் நயினார் நாகேந்திரனை உயர்த்திப்பிடித்து பாஜகவினர் போஸ்டர் ஒட்டிய விவகாரம் எடப்பாடியை கோபப்படுத்தியிருந்தது.
உடனே அவரை தொடர்புகொண்டு தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தார் எடப்பாடி. இதனை அடுத்து தனது கட்சியினருக்கு அப்படியெல்லாம் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று எச்சரிக்கை செய்த நயினார், கூட்டணி ஆட்சியை பற்றி அமித்சா பேசவில்லை ; கூட்டணி மட்டும் தான் அதிமுகவுடன் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று பல்டி அடித்தார்.
நயினார் மீட்டிங்
இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடியை அவரது அறையில் சந்தித்தார் நயினார். இருவரும் அரசியல் ரீதியாக பல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது பற்றி அதிமுக, பாஜக தரப்புகளில் விசாரித்த போது, ''அதிமுக-பாஜக கூட்டணியை பொருந்தா கூட்டணின்னு திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றன. மக்கள் மத்தியில் இது எடுபடவில்லைங்கிறது தெரியும். இருந்தாலும் இதில் அலட்சியம் காட்டக்கூடாது.
அலட்சியம் வேண்டாம்
தேர்தலுக்கான கூட்டணி ; திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்திருக்கிறோம். ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஓரணியில் ஒன்றாகியிருக்கிறோம் என்பதை நாம் இணைந்து மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இருக்கிற 10 மாதங்களில் இதனை நாம் அழுத்தமாக செய்ய வேண்டும். அதற்கு முதல்கட்டமாக அதிமுக-பாஜக தலைவர்களை மேடையேற்றும் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தலாம் என இருவருமே விவாதித்தனர். இருவரும் அதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, பாஜக கூட்டணியை அதிமுக மா.செ.க்கள் விருப்பவில்லை என எனக்கு தகவல் வருகிறது என நயினார் கேட்டிருக்கிறார்.
அதற்கு எடப்பாடி, எங்கள் கட்சி மா.செ.க்களிடம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் அதிர்ப்தி இருக்கிறது. மறுக்கவில்லை. மா.செ.க்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களுக்கு புரிய வைக்கிறேன். பாஜகவுடன் கொள்கை கூட்டணி இல்லை ; தேர்தல் கூட்டணி தான். கொள்கை வேறுபாடுகள் உள்ள கட்சிகள் கூட்டணி வைப்பதில்லையா? அப்படி கூட்டணி வைப்பதால் கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டனவா? என விவரித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications