ஆமா.. உண்மைதான்.. எடப்பாடி வீட்டு கதவை பாஜக தட்டிகிட்டே இருக்கு... போட்டுடைத்த டாக்டர் கிருஷ்ணசாமி
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை மீண்டும் இணைப்பதற்காக டெல்லி தலைமை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது; விரைவில் சுமூக முடிவு எட்டப்படும் என அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அதிமுகவுக்கு மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதா, அண்ணா,எடப்பாடி பழனிசாமி என தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்ததால் இந்த மோதல் ஏற்பட்டது.

அதிமுக- பாஜக கூட்டணி முறிவு: இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை இன்று மீண்டும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி உறுதி செய்தார்.
மீண்டும் கூட்டணி இல்லவே இல்லை: மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் பாஜக கூட்டணிக்கு அதிமுக செல்லாது. 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக்கப்படும். 2026 சட்டசபை தேர்தலுக்கும் இதே நிலைப்பாடுதான் எனவும் கேபி முனுசாமி கூறியிருந்தார்

பேச்சுவார்த்தை நடக்குது.. நல்லது நடக்கும்: அதேநேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுகவுடன் டெல்லி தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜக கூட்டணியில் அதிமுகவை மீண்டும் இடம் பெறச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக டெல்லி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறுகிறது. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தென்காசி தொகுதி: பாஜக கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி தென்காசி லோக்சபா தொகுதியை எதிர்பார்க்கிறது. லோக்சபா தேர்தலில் வலிமையான கூட்டணி அமைந்தால் எப்படியும் வெல்ல முடியும் என கனவில் இருந்தது புதிய தமிழகம் கட்சி. ஆனால் அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி முறிவு அக்கட்சிக்கு பேரதிர்ச்சியாகிவிட்டது. இன்னமும் அதிமுக- பாஜக கூட்டணி உறவு முறியவில்லை என்கிற நம்பிக்கையுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்?












Click it and Unblock the Notifications