சின்னம் கிடைக்கலைன்னா.. சின்னாபின்னம் ஆகிவிடுவீங்க.. விஜயை நேக்காக வளைத்த டெல்லி.. செம ட்விஸ்ட்
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு டெல்லி புதிய செக் ஒன்றை வைத்து உள்ளதாம். சில முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்து விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறதாம்.
1. விஜய்யிடம் பேசிய டெல்லி வட்டாரங்கள்.. நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு ஆளும் கட்சிகளை எதிர்க்க முடியாது. இங்கே பாஜக, அங்கே திமுகவை ஒரே நேரத்தில் எதிர்க்க நீங்கள் ஜெயலலிதா கிடையாது. உஷாராக இருங்கள்.

2. இப்போது வழக்கில் வசமாக மாட்டிவிட்டீர்கள். கவனமாக இருங்கள். கோர்ட் உங்கள் மீது கோபத்தை காட்டிவிட்டது. டெல்லி சப்போர்ட் இல்லாமல் நீங்கள் தாக்கு பிடிக்க முடியாது. கவனமாக இருக்கவும்.
3. உங்களுக்கு தேர்தல் நேரத்திலும் எங்கள் லாபி தேவை. நீங்கள் அங்கீகாரம் பெற்ற கட்சி கிடையாது. அப்படி இருக்க.. எப்படி ஆட்சிக்கு வர நினைப்பீர்கள்.. முதலில் உங்களுக்கு ஒரே சின்னம் கிடைக்குமா?
4. தமிழ்நாடு முழுக்க தொகுதிக்கு தொகுதி வேறு சின்னம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்? அதை வாங்கவும் கோர்ட்டுக்கு செல்ல நேரிடும்.. இதற்குத்தான் டெல்லி லாபி தேவைப்படும். சின்னம் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் அரசியலில் சின்னாபின்னம் ஆகிவிடுவீர்கள்.. மறக்க வேண்டாம் என்று விஜயிடம் டெல்லி கூறி உள்ளதாம்.
விஜய் - பாஜக கூட்டணி
இதை அடிப்படையாக வைத்தே விஜய் - பாஜக இடையே கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். விஜய் அரசியல் ரீதியாக கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளார். கட்சி தொடங்கி 1 வருடத்தில்.. விஜய்க்கு முக்கியமான இரண்டு சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன. அந்த இரண்டு சிக்கல்கள் என்னென்ன என்று பார்க்கலாம். அந்த சிக்கல் மூலம் விஜய்க்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை டெல்லி வழங்கி உள்ளது என்றும் பார்ப்போம்.
விஜய்க்கு எதிராக கரூர் வழக்கு உள்ளது. இந்த வழக்கு விஜய்க்குத்தான் சிக்கல். விஜய் கூட்டத்திற்கு தாமதமாக வந்தார். மிக லேட்டாக கூட்டத்திற்கு வந்தது. அதோடு கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்று சில இடங்களில் காத்திருந்தார். அதன்பின் போலீஸ் சொன்ன அறிவுரைகளை கேட்கவில்லை. இதெல்லாம் ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் நிர்வாகிகள் பரப்பிய வதந்திகளை கட்டுப்படுத்தவில்லை. விஜய் அமைதியை தூண்ட வேண்டும் என்று நினைக்காமல் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற திட்டம் இருப்பது போல வீடியோ போட்டார். இதெல்லாம் கோர்ட்டில் அவருக்கு கடுமையாக எதிராக திரும்பும்.
அதேபோல் விஜய் நடித்த 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.கே.டி ஸ்டுடியோஸைச் சேர்ந்த பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர், காசோலை மூலம் வழங்கப்பட்ட ₹16 கோடி ஊதியத்தைத் தவிர, ₹4.93 கோடி ரொக்கமாகக் கொடுத்ததாக அந்த ஆவணங்கள் காட்டின... இப்படி ரொக்கமாக வாங்கும் சம்பளத்திற்கு வரி காட்டாமல் விஜய் ஏமாற்றி உள்ளார் என்று வருமான வரித்துறை வாதம் வைத்துள்ளது. நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், வருமான வரித்துறையால் விதிக்கப்பட்ட ₹1.5 கோடி அபராதத்தை எதிர்த்துத் தொடுத்த வழக்கை, வருமான வரித்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 2015-16 நிதியாண்டில் ₹15 கோடி கூடுதல் வருமானத்தை தாமாக முன்வந்து தெரிவிக்காததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கும் விஜய்க்கு எதிராக உள்ளது.
இதை மனதில் வைத்தே கடந்த 48 மணி நேரமாக பாஜகவின் டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மொத்தமாக விஜய்க்கு 50+ இடங்களை கொடுக்க பாஜக முடிவெடுத்து உள்ளதாம். தமிழக வெற்றிக் கழகம் - பாஜக - அதிமுக இடையே இந்த கூட்டணி அமைக்கப்படும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். ஏற்கனவே பாஜக கூட்டணியில் அதிமுக உள்ளது. அதிமுகவிற்கு முதல்வர் பதவி உறுதி செய்யப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications