Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீனாவின் பல ஆண்டு கனவிற்கு "வேட்டு".. ஜி 20 மாநாடு முடிந்த உடனே ஷாக்.. டிராகனை வீழ்த்திய இந்திய யானை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு எதிராக இந்தியா புதிய கட்டமைப்பு திட்டம் ஒன்றை ஜி 20 மாநாட்டில் உருவாக்கி உள்ளது. இந்த நிலையில்தான் சீனாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நேற்று இத்தாலி முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள் ஜி20 உச்சி மாநாட்டில் ரயில் மற்றும் துறைமுகங்கள் சம்பந்தப்பட்ட உள்கட்டமைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதாவது சாலை போக்குவரத்து, துறைமுகங்கள் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

 Delhi G20 Summit: Italy plans to leave the belt and road project of China, is India behind it?

அமெரிக்கா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகளை இணைக்கும் விதமாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளை உள்ளடக்கிய விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு போட்டியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சீனாவின் பெல்ட் மற்றும் ரோடு பார்வையில் மத்திய கிழக்கு ஒரு முக்கிய பகுதியாகும். அமெரிக்க அதிபர் "ஜனாதிபதி பிடன் இந்தியா பிரதமர் மோடி, மற்றும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் இன்று ஒரு பெரிய கூட்டு உள்கட்டமைப்பு ஒப்பந்தத்தை போடுவார்கள் என்று கூறப்படுகிறது.

வளைகுடா மற்றும் அரபு நாடுகளை ரயில்வே நெட்வொர்க் மூலம் இணைக்கும் விதமாகவும், ஜி 20யில் அருகருகே இருக்கும் நாடுகளை ரயில் மூலம் இணைக்கும் விதமாகவும், மற்ற நாடுகளை கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் விதமாகவும் இந்த ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இந்த நாடுகளை கடல் போக்குவரத்து மூலமும், சாலை போக்குவரத்து மூலமும் போக்குவரத்து பணிகளை மேற்கொள்ளும் விதமாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இத்தாலி அதிர்ச்சி: சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு எதிராக இந்தியா புதிய கட்டமைப்பு திட்டம் ஒன்றை ஜி 20 மாநாட்டில் உருவாக்கி உள்ளது. இந்த நிலையில்தான் சீனாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக நேற்று இத்தாலி முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் (பிஆர்ஐ) இருந்து வெளியேற இத்தாலி திட்டமிட்டுள்ளது, அந்நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பிஆர்ஐயை விட எங்களுக்கு முக்கியமான பல விஷயங்கள் உள்ளன. சீனாவுடன் உறவு கொள்ள பல விஷயங்கள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார். ஜி 20 மாநாட்டின் கடைசி நாளில் சீனாவை அதிர்ச்சி அடைய வைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்: இந்தியா சீனா இடையே தற்போது எல்லையில் நிலவும் பிரச்னைக்கு தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை இந்தியா தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வருகிறது. இந்தியாவின் எதிர்ப்பை சமாளிக்கலாம் என்று சீனா முதலில் கருதியது.

ஆனால் இந்தியாவின் ராஜாங்க ரீதியான பலம் காரணமாக தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்திற்கு நிறைய எதிர்ப்புகள் வந்தது. இதுதான் இந்தியா மீதான சீனாவின் கோபத்திற்கு காரணம் ஆகும். அது என்ன தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம்?... இந்த விரிவான கட்டுரையை படியுங்கள் புரியும்!

என்ன மாதிரியான திட்டம்?: உலகம் முழுக்க இருக்கும் நாடுகளை சீனாவுடன் இணைப்பதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்தின் நோக்கம். 2013ல் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 160 நாடுகளில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. சீனா அல்லது வேறு ஒரு தனி நாடு உலகில் அறிவித்ததிலேயே இந்த திட்டம்தான் பெரிய திட்டம் ஆகும். சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் கனவு திட்டம் இதுவாகும்.

இந்த திட்டத்தை 2013ல் ஜி ஜிங்பிங் இந்தோனேசியா மற்றும் கஜகஸ்தான் பயணத்தின் போது அறிவித்தார். இதில் இருக்கும் தி பெல்ட் என்பது உலகம் முழுக்க சீனா அமைக்க உள்ள சாலைகளை குறிக்கும். ரோட் என்பது உலகம் முழுக்க சீனா கடல் வழியாக ஏற்படுத்த உள்ள கடல் போக்குவரத்தை குறிக்கும். இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் அந்நாட்டு அரசியலமைப்பில் ஒரு அங்கமாக 2017ல் சேர்க்கப்பட்டது.

சீனா என்ன செய்யும்?: இதன் மூலம் உலகில் இருக்கும் நாடுகளின் பகுதிகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சாலைகள் அமைத்து சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும். இதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டத்தின் நோக்கம்.

பெயர் மாற்றியது: முதலில் இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் திட்டத்திற்கு ஒன் பெல்ட் ஒன் ரோட் ஸ்டிரேட்டஜி (One Belt One Road Strategy) என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால் இதில் இருக்கும் ஸ்டிரேட்டஜி என்ற வார்த்தை பல நாடுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். அதேபோல் ஒன் என்ற வார்த்தையும் பல நாடுகளுக்கு கோபத்தை உண்டாக்கும். இது பெரிய எதிர்ப்புகளை ஏற்படுத்தும் என்று சீனா அஞ்சியது. இதனால் திட்டத்தின் பெயர் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் என்று மாற்றப்பட்டது.

மூன்று விதமாக பிரிக்கிறது:

இந்த திட்டத்தை சீனா மொத்தமாக மூன்று விதமாக பிரிக்கிறது.

சில்க் ரோட் எக்கனாமிக் பெல்ட் (Silk Road Economic Belt) - இது சீனா சார்பாக உலகில் சாலை வழியாக போடப்பட உள்ள போக்குவரத்து பாதைகள் ஆகும். அதன்படி சாலைகள் மூலம் ஏசியாவில் உள்ள முக்கால்வாசி நாடுகளை சீனா இணைக்கும்.

மேரிடைம் சில்க் ரோடு (Maritime Silk Road) - ஆசியா மட்டுமின்றி மற்ற கண்டங்களில் உள்ள நாடுகளை சீனாவுடன் கடல் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டமாகும் இது.

ஐஸ் சில்க் ரோடு (Ice Silk Road) - இது சீனாவையும் ஆர்டிக் கடல் பகுதியில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் திட்டம் ஆகும். ரஷ்யா - சீனா இரண்டு நாடும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது.

எப்போது முடியும்?: இந்த தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) 2049ல் முடியும். சீனாவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது என்ன வருடம் என்று கண்டிப்பாக தெரியும். ஆம் சீனாவின் நூற்றாண்டு வருடம் ஆகும் இது. சீனா தனது 100ம் ஆண்டு கொண்டாட்டத்தை செயல்படுத்தும் போது, தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) அமலுக்கு வந்து இருக்கும். இதற்காக தற்போது சீனா இந்த திட்டத்தின் பணிகளை மிக தீவிரமாக செய்து வருகிறது.

 Delhi G20 Summit: Italy plans to leave the belt and road project of China, is India behind it?

இந்த திட்டத்தின் பின்னணி?:

இந்த திட்டத்தை சீனா செயல்படுத்த பின் வரும் காரணங்கள் சொல்லப்படுகிறது.

உலக நாடுகள் அனைத்தையும் சீனாவோடு இணைப்பது.

பொருளாதார ரீதியாக உலகம் முழுக்க இருக்கும் சந்தையை ஆக்கிரமிப்பது.

உலக நாடுகளின் சந்தையை தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) மூலம் இணைத்து, அங்கு சீன பொருட்களை ஏற்றுமதி செய்வது.

உலகை சீனாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவது. முக்கியமாக பொருளாதார ரீதியான கட்டுப்பாடு.
வியாபாரம், விற்பனை, பொருளாதாரம்தான் இதன் முதல் நோக்கம்.

பெரிய வர்த்தகம்: இந்த திட்டம் மூலம் மொத்தம் 60% மக்கள் இணைக்கப்படுவார்கள். ஆம் உலகம் முழுக்க இருக்கும் 60% மக்கள் இதன் மூலம் இணைக்கப்படுவார்கள். 35% உலக பொருளாதாரம் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும். 40% உலக மார்க்கெட் சந்தை இதன் மூலம் கட்டுப்படுத்தப்படும். 75% கடல் ஏற்றுமதி இறக்குமதி போக்குவரத்து இந்த திட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+