ஜி 20 மாநாட்டில் இன்று மிக முக்கியமான நாள்! 2ம் நாள் நிகழ்வில் நடக்க போவது என்ன? டெல்லி பக்கம் ஃபோகஸ்
சென்னை: ஜி 20 டெல்லி மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. டெல்லியில் இன்று காலை 8 மணிக்கு இரண்டாம் நாள் நிகழ்வுகள் தொடங்குகிறது.
ஜி20 டெல்லி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கியது (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.

நேற்று இந்த மாநாட்டில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் ஜி 20 டெல்லி மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. இன்றைய கூட்டத்தில் இன்று என்னென்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
காலை 8.15 மணி முதல் 9 மணி வரை: தூதுக்குழுக்களில் உள்ள பல நாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தனிப்பட்ட வாகன அணிவகுப்புகளில் ராஜ்காட் வருவார்கள்.
காலை 9.00 மணி முதல் 9.20 மணி வரை: மகாத்மா காந்தியின் சமாதியில் தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள். மேலும், மகாத்மா காந்தியின் விருப்பமான பக்திப் பாடல்களின் நேரடி நிகழ்ச்சி நடைபெறும்
காலை 9.20: தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் பின்னர் பாரத் மண்டபத்தின் தலைவர்கள் ஓய்வறைக்கு செல்வார்கள். அங்கே காலை உணவு சாப்பிடுவார்கள்.
காலை 9.40 முதல் 10.15 வரை: பாரத மண்டபத்திற்கு தலைவர்கள் மற்றும் தூதுக்குழு தலைவர்கள் வருகை
காலை 10.15-10.30: பாரத் மண்டபத்தின் தெற்கு பிளாசாவில் மரம் நடும் விழா நடைபெறும்.
காலை 10.30-12.30: உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வு, 'ஒரு எதிர்காலம்' என்ற பெயரில் நடத்தப்படும், அந்த இடத்தில் நடைபெறும், அதைத் தொடர்ந்து தலைவர்களின் ஒருமித்த ஜி 20 பிரகடனம் வெளியிடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்.
நேற்று ஜி 20ன் முதல் நாள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த ஜி 20 உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
அதிகாரப்பூர்வ G20 இணையதளத்தின்படி, 18வது G20 உச்சி மாநாட்டின் தீம் "வசுதைவ குடும்பகம்". இது "ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்று மொழிபெயர்க்கப்படும் சமஸ்கிருத சொற்றொடர் ஆகும். பழங்கால சமஸ்கிருத இலக்கியங்களில், குறிப்பாக மகா உபநிடதத்தில் இந்த சொற்றொடர் இருந்தது. மனிதர்கள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் உட்பட அனைத்து உயிர்களின் மதிப்பையும், பூமி மற்றும் பரந்த பிரபஞ்சத்தில் நாம் எல்லோரும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த கூட்டம் நடக்க உள்ளது.
இதற்காக சர்வதேச தலைவர்கள் பலர் டெல்லிக்கு வந்து உள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்தர பிரதேச விமான நிலையங்களில் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அங்கே சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் டெல்லியில் மொத்தமாக பாதுகாப்பு மாற்றப்பட்டு உள்ளது. நகரத்திற்கு உள்ளே பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications