ஏ.ஆர்.ரகுமான் ரூ 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு! ஏன் என்னாச்சு?
சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 படத்தில் வீர ராஜ வீர பாடலை காப்புரிமையை மீறும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் பயன்படுத்தியுள்ளதாக பாடகர் வாசிஃபுதீன் , டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரூ 2 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 என்ற படம், கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை ஒட்டியது. அந்த கதையை மையமாக வைத்து அதில் கமர்சியல் கலந்து எடுக்கப்பட்டது பொன்னியின் செல்வன் பார்ட் 1.

இதையடுத்து பொன்னியின் செல்வன் பார்ட் 2 எடுக்கப்பட்டது. இந்த படத்தில் சரத்குமார், பிரபு, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைத்திருந்தார். இவர் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமானார். தென்னிந்தியாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். அதிகம் ஊதியம் பெறும் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் உள்ளார்.
தற்போது மணிரத்னத்தின் தக் லைஃப் படத்திற்கும் ரகுமான்தான் இசையமைத்திருக்கிறார். ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார். இவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மையை கொண்டிருக்கும். இவர் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் காப்புரிமை விதிமீறல் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு ரகுமான் இசையமைத்தார்.
இதையடுத்து அதன் இரண்டாவது பாகம் 2023 ஆம் ஆண்டு வெளியானது. அதற்கும் அவர்தான் இசை! இன்த படத்தை லைகா நிறுவனம் மற்றும் மணியின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தது.
இந்த படத்தில் ரகுமானின் வீர ராஜ வீர பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் காப்புரிமை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாசிஃபுதீன் தாகூர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது தனது தாத்தா, தந்தை இயற்றிய சிவஸ்துதி இசையை மையமாக கொண்டு அந்த பாடல் அமைக்கப்பட்டது என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் காப்புரிமை மீறப்பட்டதாக கூறி ரூ 2 கோடியை நஷ்ட ஈடாக செலுத்த வேண்டும் என ஏ.ஆர்.ரகுமானுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது இசையை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக ரூ 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications