வாடகைக்கு தந்த வீட்டை திருப்பி கேட்ட ஓனர்.. கோர்ட்டுக்கு போன வாடகைதாரர்.. நீதிபதி வைத்த செம ட்விஸ்ட்
சென்னை: டெல்லி உயர் நீதிமன்றம் வீடு வாடகைக்கு விடுதல் தொடர்பாக முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வீட்டு ஓனர் ஒருவர் தனது சொந்த தேவைக்காக எப்போது வேண்டுமானாலும் வாடைக்கு விடப்பட்ட வீட்டை திரும்ப பெற முடியும். இதன்மூலம், வீட்டு உரிமையாளர், ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும், தனது கணவரின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக வாடகைக்கு விடப்பட்ட வீட்டை மீண்டும் பெறலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
டெல்லி பெண் ஒருவரின் மேல்முறையீட்டை விசாரித்தபோது இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த பெண்ணின் கணவர் வேலையில்லாமல் அவளைச் சார்ந்து இருப்பதால், தனது உலர் பழ வியாபாரத்தைத் தொடங்க வாடகைக்கு விடப்பட்ட வீடு தேவைப்படுவதாக பெண் வாதிட்டார். வழக்கில் தோல்வியடைந்த வாடகைக்கு இருந்தவர், பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

வழக்கு விசாரணையின் போது, குத்தகைதாரரின் வழக்கறிஞர், பெண் இந்த வழக்கைத் தொடர்வதற்கு முன் மற்ற சொத்துக்களை விற்றுவிட்டதாக கூறினார். பெண்ணுக்கு வேறு பொருத்தமான இடங்கள் இருந்தபோதிலும், இந்த குறிப்பிட்ட சொத்து அவசியமில்லை என்பதை குறிக்கும் வகையில், அவர் சொத்துக்களை வேண்டும் என்றே விற்றுள்ளார். அந்த பெண் நினைத்திருந்தால் மற்ற சொத்துக்களை விற்காமல் வைத்துவிட்டு அதில் கடை நடத்தி இருக்கலாம்.
ஆனால் இப்போது வேண்டும் என்றே சொத்துக்களை விற்றுள்ளார். அதோடு அவர் இந்த மனுக்களில் தனது சொத்துக்கள் தொடர்பாக நிறைய தகவல்களை மறைத்து உள்ளார்.
வாடகைக்கு இருந்தவர் வைத்த வாதம்
வாடகைக்கு இருந்தவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில், அந்த பெண் ஒரு இல்லத்தரசி என்பதால், கணவரின் தேவைகள் குறித்த அவரது கூற்றுக்கள் நம்பத்தகுந்ததாக இல்லை என்றும், அவரது கணவர் அவளை விட வயதில் மூத்தவர் என்பதால் அவளைச் சார்ந்து இருக்கக்கூடாது என்றும் வாதிட்டார். மேலும், தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும், இளைய மகன் ஏற்கனவே தனது சொந்த உலர் பழ வியாபாரத்தை நடத்தி வருவதாகவும் வாடகைக்கு இருந்தவர் குறிப்பிட்டார். பெண் தனது வருமானத்திற்கான ஆதாரத்தை வழங்கத் தவறிவிட்டார் அல்லது அவரது கணவர் உண்மையில் வேலையில்லாமல் இருக்கிறார் என்பதையும் நிரூபிக்கவில்லை, இது உண்மையான தேவை என்ற கூற்றை பலவீனப்படுத்துகிறது என்றும் வாடகைக்கு இருந்தவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கில் பெண் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், டிஸ் ஹசாரி நீதிமன்றங்கள் ஏற்கனவே வாடகைக்கு இருந்தவர் எழுப்பிய வாதங்கள் குறித்து விரிவான முடிவுகளை வழங்கியுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பெண்ணின் வழக்கறிஞர் அருண் பிபல், தனது கட்சிக்காரர் ஒரு இல்லத்தரசியாக இருப்பதால், தனது கணவருக்கு உதவும் கடமைகளை நிறைவேற்றுவதற்கு அது தடையாக இருக்கக்கூடாது என்று வாதிட்டார். எனவே, பெண்ணின் இந்தத் தேவையில் நீதிமன்றங்கள் தலையிடாமல் இருந்தது சரியே என்றும், மேலும் தலையிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.
பெண்ணின் கணவர் உண்மையில் வேலையில்லாமல் இருக்கிறாரா அல்லது அவர்களின் மகன்கள் வியாபாரம் செய்கிறார்களா என்பது குறித்து, வாடகைக்கு இருந்தவர் தான் பெண்ணின் கூற்றுகளுக்கு முரணான ஆவணங்கள் அல்லது ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்று பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்தார். அவ்வாறு செய்ய வாடகைக்கு இருந்தவர் தவறியதால், வாடகைக்கு இருந்தவருக்கு எதிராக வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது சரி என்றும் கூறினார்.
டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
டெல்லி உயர் நீதிமன்றம், இதையடுத்து வீட்டு ஓனர் ஒருவர் தனது சொந்த தேவைக்காக எப்போது வேண்டுமானாலும் வாடைக்கு விடப்பட்ட வீட்டை திரும்ப பெற முடியும். இதன்மூலம், வீட்டு உரிமையாளர், ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும், தனது கணவரின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக வாடகைக்கு விடப்பட்ட வீட்டை மீண்டும் பெறலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
அந்த பெண் தனது கணவரின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக இந்த இடம் தேவை என்று கூறும்போது, அது தனது குடும்பக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு பகுதியாக இருப்பதால், குத்தகைதாரரோ அல்லது நீதிமன்றமோ அதில் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று கூறியது.
பெண்ணின் கணவர் வேறு எங்காவது வேலை செய்கிறார் அல்லது அவரது இளைய மகனுடன் பணிபுரிகிறார் என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரங்களை வாடகைதாரர் தான் முன்வைத்திருக்க வேண்டும். அத்தகைய எந்த ஒரு ஆதாரத்தையும் அவர் முன்வைக்காததால், ஒரு கணவர் ஒரு இல்லத்தரசியைச் சார்ந்து இருக்க முடியாது என்ற குத்தகைதாரரின் கூற்று அவரது வழக்கிற்கு எந்த ஆதரவையும் வழங்கவில்லை என்று கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications