டெல்லியை கதிகலங்க வைத்த சம்பவம்.. பல ஆண்டுகளாக சதி! லாக்கரில் சிக்கிய AK-47.. டாக்டர் சொன்ன ரகசியம்!
டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் முஜம்மில் முஜம்மில் ஷகீல் கொடுத்த வாக்குமூலத்தின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது, டெல்லி சம்பவம் எதிர்பாராமல் நடந்த "panic blast" எனவும், இந்தியாவின் பல நகரங்களை குறிவைத்து பல ஆண்டுகளாக சதித்திட்டம் தீட்டப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டெல்லி செங்கோட்டைக்கு அருகே ஒரு i20 காரில் வெடித்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 13 பேர் உயிரிழந்த அந்த குண்டுவெடிப்பு சம்பவம், முதலில் ஒரு தனி தாக்குதல் போலத் தோன்றினாலும், விசாரணை அதிகாரிகள் அதனைப் பெரிய அளவிலான சதி திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த தாக்குதல் சம்பவம் ஒரு "panic blast" ஆக நடந்ததாகவும், உண்மையான திட்டம் பல நகரங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டாக்டர் முஜம்மில் ஷகீல் கொடுத்த வாக்குமூலம் போலீசாரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பு
இதுதொடர்பாக பேசியுள்ள முஜம்மில்,"இந்த வெடிகுண்டு தாக்குதல் திட்டம் 2023-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் குண்டு தயாரிக்க வெடிக்க தேவையான பொருட்களைச் சேகரித்து வந்துள்ளார். யூரியா, அமோனியம் நைட்ரேட், NPK உரம் உள்ளிட்ட வேதிப்பொருட்களைப் பெருமளவில் வாங்கி வந்திருப்பதும், அவற்றை பாதுகாப்பாக வைக்க டீப் ஃப்ரீசர் வாங்கியிருந்ததும் விசாரணையில் வெளிச்சமிட்டுள்ளது.
பானிக் பிளாஸ்ட்
குருகிராம் மற்றும் நுஹ் பகுதிகளில் இருந்து மட்டும் 26 குவிண்டல் உரத்தை ரூ.3 லட்சம் கொடுத்து வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் சதியில் ஈடுபட்டவர்களின் மிகவும் தெளிவாக திட்டமிட்டு வேலைகளை பிரித்து செய்துள்ளனர். உமர் முகம்மது என்பவர் உரத்தை குண்டு வெடிப்புக்கு பயன்படும் வகையில் மாற்றும் பொறுப்பை செய்துள்ளார். முஜம்மிலுடன் சேர்ந்து அவர் ஆன்லைன் வீடியோக்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் குண்டு செய்யும் முறைகளை கற்றுக் கொண்டுள்ளார். அவர்கள் ரகசிய அரிசி மில்லில் யூரியாவை அரைத்து வேதிப்பொருளாக மாற்றியுள்ளார்.
முஜம்மில் ஷகீல்
இந்த வெடிகுண்டு சதிக்கு எந்த வெளிநாட்டு அமைப்பும் நிதி வழங்கவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முஜம்மில், உமர் மற்றும் மற்ற குற்றவாளிகள் சேர்ந்தே ரூ.26 லட்சம் திரட்டி இந்த சதியை முன்னெடுத்து வந்துள்ளனர். உமர் மட்டும் ரூ.2 லட்சம் கொடுத்திருக்கிறார். முஜம்மில் ரூ.5 லட்சம், ஆதில் மற்றும் முஸஃபர் முறையே ரூ.8 மற்றும் ரூ.6 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பண பரிவர்த்தனையில் ஏற்பட்ட முரண்பாட்டினால் அல்ஃபலாஹ் பல்கலைக்கழகத்திலேயே உமரும் முஜம்மிலும் சண்டையிட்டதாகவும், அதன் பிறகு உமர் தனது EcoSport காரை முஜம்மிலுக்கு கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நிதி திரட்டல்
மேலும், முஜம்மில் ரூ.6.5 லட்சம் கொடுத்து AK-47 துப்பாக்கி வாங்கியிருப்பதும், அது ஆதிலின் லாக்கரில் இருந்து மீட்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவில் இருந்த முஜம்மில், ஆதில், முஸஃபர் துருக்கிக்கும் பயணம் செய்துள்ளனர். அங்கு இருந்து ஆப்கானிஸ்தானில் நுழைய திட்டமிட்டிருந்தபோதும், அவர்களுக்குத் தொடர்புடைய நபர் திட்டத்தை கைவிட்டதால் அது நடக்கவில்லை.
பயங்கரவாத குழு
இந்த அனைத்து தகவல்களும் பார்க்கும் போது டெல்லி வெடிப்பு ஒரு தனி சம்பவம் அல்ல. இந்தியாவின் பல நகரங்களை இலக்காகக் கொண்ட ஒருங்கிணைந்த குண்டுவெடிப்பு சதியின் ஆரம்ப கட்டமே என்று விசாரணை அமைப்புகள் கண்டறிந்துள்ளன. இந்த சதி செயலில் வெளிநாட்டு தொடர்புகள், உள்நாட்டு தீவிரவாத குழுக்கள் என பலருக்கு தொடர்பிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்த கட்ட விசாரணையில், மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் வெளிவரலாமென விசாரணை அதிகாரிகள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications