தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்?
சென்னை: Vijay Political Impact 2026 குறித்த டெல்லி அரசியல் நகர்வுகள் தற்போது தமிழக அரசியலில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.. தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் ஒரு பக்கம் அனல் பறக்க, மறுபக்கம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் எதற்கும் அஞ்சாமல் தன் பாட்டுக்குத் தன் அரசியல் பாதையைச் செதுக்கிக்கொண்டு இருக்கிறார். அவர் யாரையும் அழைக்கவில்லை, யாரிடமும் ஆதரவு கோரவில்லை. ஆனால், டெல்லி வரை விஜயின் தாக்கம் எதிரொலிப்பது தான் தற்போதைய ஹாட் டாபிக். அதுகுறித்து எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது,
கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் விஜயின் ஆதரவைக் கோருவோம் என்று வெளிப்படையாக அறிவித்திருப்பது ஒரு பெரிய அரசியல் ட்விஸ்ட்டாகவே பார்க்கப்படுகிறது.

பாஜக - தூண்டில்
"தற்போது வரை தமிழக வெற்றி கழகத்துடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை, இருந்தாலும் விஜய் தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சி அமைக்க அவரது ஆதரவை நாடுவோம்" என்று அத்வாலே கூறியிருக்கிறார். திமுகவுக்குப் பெரும் சவாலாக விஜய் இருப்பார் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் பாஜக, ஒருபுறம் அதிமுகவைச் சீண்டிக்கொண்டே மறுபுறம் விஜய்க்கு தூண்டில் போடுவதாக தெரிகிறது.
விஜய் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிப்பார் என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும், அவர் தனித்து நிற்பது யாருக்குப் பாதகமாக அமையும் என்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
சிறுபான்மையினர் வாக்குகள்
முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்குகளை விஜய் மொத்தமாக அறுவடை செய்யக்கூடும் என்பதால், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய 2 துருவங்களும் அவரைத் தங்கள் பக்கம் இழுக்க போட்டி போடுகின்றன. அதிமுகவின் கோட்டையைச் சரிக்கும் விதமாகச் செங்கோட்டையன் போன்ற பழுத்த அரசியல்வாதிகள் விஜய் பக்கம் சாய்ந்திருப்பது, விஜயைச் சுற்றியுள்ள அரசியல் பிம்பத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.
இந்த அரசியல் சேஸிங்கில் விஜய் எனும் காரணி வெறும் ஓட்டுகளைப் பிரிக்கும் சக்தியாக மட்டும் பார்க்கப்படவில்லை; மாறாக பல வருடங்களாகவே தமிழகத்தில் நிலவி வந்த இருமுனை போட்டியை உடைத்து, ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை விதைக்க முயல்வதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்
சஸ்பென்ஸ் இதுதான்
மற்ற கட்சிகள் தங்கள் இருப்பைத் தக்கவைக்க விஜயை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் துடித்தாலும், எதற்கும் மசியாமல் அவர் காட்டும் நிதானம் டெல்லித் தலைவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.. கூட்டணி பேச்சுகள் எதுவுமின்றி தனித்து களம் காணும் விஜயின் இந்த அதிரடித் திட்டம், பாரம்பரிய அரசியல் வியூகங்களைச் சிதைத்து புதியதொரு ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்குமா என்பதே இப்போது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையாகவும் மாறியுள்ளது.
இப்படி அனைத்து முக்கியமான கட்சிகளும் விஜய்க்கு வலை வீசி காத்திருந்தாலும், அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் அரசியல் பயணத்தைத் தொடர்வது தான் தமிழக அரசியலின் தற்போதைய மிகப்பெரிய சஸ்பென்ஸ்,, இந்த எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் விடை கிடைக்கப்போகும் மே 4ம் தேதிக்காகத் தமிழகம் ஆவலோடு காத்துக் கிடக்கிறது.
- சிறப்பு நிருபர்
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications